அதிதி பாலன் | |
---|---|
பிறப்பு | 1990 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2017– தற்போது வரை |
விருதுகள் | 2017 அருவி திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான ஆனந்த விகடன் விருது |
அதிதி பாலன் (Aditi Balan, பிறப்பு:1990) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற அருவி கதாபாத்திரத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[1][2]
2017ஆம் ஆண்டில் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015 இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
ஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|---|
2015 | என்னை அறிந்தால் | ஹேமானிகாவின் மாணவியாக, பெயர் குறிப்பிடப்படாத சிறு வேடம் | கௌதம் வாசுதேவ் மேனன் | தமிழ் | ||
2017 | அருவி | அருவி | அருண் பிரபு புருசோத்தமன் | தமிழ் | ||
2021 | குட்டி ஸ்டோரி | குச்சு | தமிழ் | பகுதி: ஆடல் பாடல் | [3] | |
2021 | கோல்டு கேஸ் | மேதா பத்மஜா | மலையாளம் | அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது | [4] | |
2022 | படவீட்டு | சியாமா | மலையாளம் | வெளியிடப்படவில்லை | [5] | |
அறிவிக்கப்படும் | சகுந்தலம் | அனசுயா | தெலுங்கு | படப்பிடிப்பில் | [6] [7] |