அந்தமான் பட்டாம்பூச்சி மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகெலும்பி
|
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கீட்டோடான்
|
இனம்: | கீ. அந்தமனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
கீட்டோடான் அந்தமனென்சிசு குயிடெர் & டெபெலியசு, 1999 |
அந்தமான் பட்டாம்பூச்சி மீன் (கீட்டோடான் அந்தமனென்சிசு) என்பது அந்தமான் கடல் பகுதியில் காணப்படும் கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும். இது கீட்டோடொன்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி மீன் ஆகும். இது இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்டது.
அந்தமான் பட்டாம்பூச்சி மீன் உடல் முழுவதும் மஞ்சள் நிறமுடையது. இதன் தலையின் மேற்புறத்திலிருந்து கண்கள் வழியாகக் கருப்பு பட்டையும் வால் துண்டு மீது கருப்பு நிற வண்ணத் திட்டு காணப்படுகிறது.[2] முதுகுத் துடுப்பில் 1:4 முள்ளெலும்புகளும் 18 மென்மையான கதிர்களும் உள்ளன. குதத் துடுப்பில் 4 முள்ளெலும்புகளும் 16-18 மென்மையான கதிர்களும் உள்ளன. இந்த சிற்றினம் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர்கள் (5.9 அங்) நீளமுடையது.[3]
அந்தமான் பட்டாம்பூச்சி மீன், கிழக்கு இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது. இது இலங்கை, தென்மேற்கு இந்தியா, அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது. மியான்மரில் உள்ள மெர்குய் தீவுக்கூட்டம், தாய்லாந்தின் சிமிலன் தீவுகள் மற்றும் இந்தோனேசியாவின் வடமேற்கு சுமத்ராவில் உள்ள வே. தீவுகளிலும் காணப்படுகிறது.[1]
அந்தமான் பட்டாம்பூச்சி மீன், பாறை அல்லது பவளப்பாறை வாழ்விடங்களில் கரையோரத்திற்கு அருகில் அல்லது வெளிப்புற சரிவுகளில் காணப்படுகிறது. இவை தனிமையில் காணப்படலாம். பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய கூட்டமாகவோ காணப்படும். இவை பெரும்பாலும் பவள மொட்டுகளை உணவாக உட்கொள்கின்றன. இது முட்டையிடும் வகையினைச் சேர்ந்தது.[3] இந்த சிற்றினம் மெதுவாக இனப்பெருக்கம் செய்யும் மீன் என்று கருதப்படுகிறது. இது இனப்பெருக்கம் செய்ய உயிருடன் கூடிய கிளைத்த பவளத்தைக் கொண்டிருக்க வேண்டும். இவை 1 மற்றும் 10 மீட்டர்கள் (3.3 மற்றும் 32.8 அடி) ஆழமுடைய கடற்பகுதியில் காணப்படுகின்றன.[1]
அந்தமான் பட்டாம்பூச்சி மீன் முதல் முறையாக 1999-ல் ரூடை குயிடெரும் கெல்மட் டெபெலியசும் பெரிய நிக்கோபார் தீவில் சேகரிக்கப்பட்ட மாதிரி மூலம் விவரித்தனர். பல வகைப்பாட்டியலாளர்கள் அந்தமான் பட்டாம்பூச்சி மீனை கீட்டோடான் புளேபியசின் உள்ளூர் வண்ண வடிவமாகக் கருதுகின்றனர்.[2]
மற்ற வண்ணத்துப்பூச்சி மீன்களைப் போலவே, கருப்பு நிறக் கோடுகள் மற்றும் ஒரு வித்தியாசமான நிறப் பொட்டு கொண்ட மஞ்சள் நிற உடல்கள் கொண்ட, இது டெட்ராகீடோடன் என்ற துணைப்பேரினத்தைச் சேர்ந்தது. இதனைக் கீட்டோடான் பேரினத்திலிருந்து பிரித்தால், இந்த துணைப்பிரிவு மெகாபுரோடோடனில் வைக்கப்படும்.[4][5]