அந்தோணி பாப்புசாமி Antony Pappusamy | |
---|---|
மதுரை உயர்மறைமாவட்டம் | |
நியமனம் | 26 சூலை 2014 |
முன்னிருந்தவர் | பீட்டர் பெர்னாண்டோ |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 7 சூலை 1976 |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 1 அக்டோபர் 1949 மாரம்பாடி ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் |
வகித்த பதவிகள் | ஆயர், திண்டுக்கல் மறைமாவட்டம் |
குறிக்கோளுரை | எழும்பு (ARISE) |
அந்தோணி பாப்புசாமி (Antony Pappusamy) [1] (பிறப்பு: அக்டோபர் 1, 1949) மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஆவார்[2]
தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் மாராம்பாடி கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் இவர் பிறந்தார். [3] [4] திருச்சி கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்தார், மேலும் மதுரை செயின்ட் பீட்டர்சு பள்ளியில் லத்தீன் மற்றும் துவக்க நிலை படிப்புகளையும் முடித்தார். புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சியில் பட்டம் பெற்றார். திருச்சியின் புனித பவுல் இறையியல் பள்ளியில் இறையியல் படிப்பை முடித்தார். [5]
7 சூலை 1976 அன்று கத்தோலிக்க திருச்சபையின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
5 நவம்பர் 1998 அன்று மதுரையின் துணை ஆயராக நியமிக்கப்ட்டார்.
4 பிப்ரவரி 1999 இல் ஜாபாவின் ஆயராக நியமிக்கப்ட்டார். 10 நவம்பர் 2003 அன்று திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.
26 சூலை 2014 அன்று திருத்தந்தை பிரான்சிசு அவர்களால் மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். [6] [3]