துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 4 நவம்பர் 2016 |
வகை | நகர்ப்புற திட்டமிடல் முகமை |
ஆட்சி எல்லை | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையகம் | அனந்தபூர் 16°10′N 81°08′E / 16.17°N 81.13°E |
அனந்தபுரமு-இந்துப்பூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Anantapuramu–Hindupur Urban Development Authority) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்புற திட்டமிடல் நிறுவனமாகும்.[1] 2017 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 4 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச பெருநகரப் பகுதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2016 இன் கீழ் அனந்தபுரமுவை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[2] [3]
அனந்தபுரமு-இந்துப்பூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் அதிகார வரம்பு 2,791.78 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் (1,077.91 சதுர மைல்) பரவியுள்ளது.[4] அனந்தபூர் மாவட்டம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சிறீ சத்ய சாய் மாவட்டத்தின் 18 மண்டலங்களில் உள்ள 177 கிராமங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. அனந்தபுரம் மாநகராட்சியும் இந்துப்பூர் மற்றும் தர்மாவரம் ஆகிய இரண்டு நகராட்சிகளும் இவ்வாணையத்தின் ஒரு பகுதியாகும்.[4]