அனந்து | |
---|---|
இறப்பு | 1998 |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1970–1997 |
அனந்து என்பவர் ஒரு இந்திய திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பெரும்பாலும் கே. பாலசந்தருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நடிகர் கமல்ஹாசனின் வழிகாட்டியாக இருந்தவர்.[1][2]
அனந்து திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குநர் கே. பாலசந்தரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். இவர் இயக்குநர் சி. ருத்ரைய்யாவுடன் இரண்டு படங்களில் பணியாற்றினார். படத்தின் தலைப்புப் பட்டியில் (டைட்டில் கார்டு), ருத்ரய்யா அவள் அப்படித்தான் படத்தை அனந்துவுக்கு அர்ப்பணித்திருந்தார். சி. வி. இராசேந்திரன் இயக்கிய அனுபவம் புதுமை மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்களில் சித்ராலயா கோபுவுடன் துணை உரையாடல் எழுத்தாளராக பணியாற்றினார். கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதாவுடன் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் நடித்தார்.[3]
1991 இல், அனந்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆனந்த் பாபு, ராதா, ரம்யா கிருஷ்ணன் போன்றோரின் நடிப்பில் உருவான சிகரம் என்ற படத்தை இயக்கினார்.[4] ஒரு விமர்சகர் "யதார்த்தத்தின் மீது ஒரு கண்ணும், ஆழமான உரையாடலுக்கான திறமையும் கொண்ட, அனந்து இதை தன் திரைப்பட வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நுழைவாக ஆக்குகிறார்." [5]
அனந்துவை கமல்ஹாசன் நெருங்கிய கூட்டாளியாகவும் வழிகாட்டியாகவும் கருதினார்.[6] அனந்து மூலம், கமலால் கே. பாலசந்தருடன் நெருங்கிய தொடர்பைப் பேண முடிந்தது.[7]
1970 களின் முற்பகுதியில், கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இருந்து வந்த சலிப்பூட்டும், முக்கியத்துவம் அற்ற வேடங்களால் மனமுடைந்து இருந்தார். மலையாளப் படங்களில் பணியாற்றுவதற்கான வாழ்ப்புகளை ஏற்றுக் கொண்டபின், அனந்துவுக்கு தனது திரைப்பட ஆர்வத்தை மீண்டும் ஊக்குவித்ததற்காக பாராட்டினார்.[8] இந்த காலகட்டத்தில், அனந்து கமலஹாசனின் திரை நடிப்பை மதிப்பிடுவதன் மூலமும், உலக சினிமாவை அவருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலமும் அவரது திறமையை வளர்த்துக் கொள்ள உதவினார்.[9] தனக்கு திரைக்கதை எழுத கற்றுக் கொடுத்ததற்காக அனந்துவை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
1990 களில் கமலின் பல படங்களில் அனந்து பலவகையிலும் அவருடன் நெருக்கமாக பணியாற்றினார். அனந்து அவரின் நம்மவர் படத்தின் தலைப்புக்கு காரணமாக இருந்தார். இந்த சொல் பின்னர் கமல்ஹாசனால் அவரது அரசியல் நடவடிக்கைகளில் தழுவிக்கொள்ளப்பட்டது.[10]
1998 இல் அனந்து இறந்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தமிழில் இயக்கிய முதல் படமான ஹே ராம் (2000) ஆனந்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[11] 2016 இல் ஹென்றி லாங்லாயிஸ் விருதை பெற்ற பிறகு, கமல்ஹாசன் அந்த விருதை அனந்துக்கு அர்ப்பணித்தார்.[12] கமலின் 60 வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஒரு பகுதியாக, 2019 ல் கமல்ஹாசனின் அலுவலகங்களில் அனந்துவின் அதிகாரப்பூர்வ உருவப்படம் திறக்கப்பட்டது.[13]
ஆண்டு | படம் | பணி | குறிப்பு | Ref. | ||||
---|---|---|---|---|---|---|---|---|
கதை | திரைக்கதை | உரையாடல் | இயக்கம் | நடிப்பு | ||||
1968 | கலாட்டா கல்யாணம் | ஆம் | ||||||
1970 | கல்யாண ஊர்வலம் | ஆம் | ||||||
1978 | அவள் அப்படித்தான் | ஆம் | ஆம் | |||||
1980 | கிராமத்து அத்தியாயம் | ஆம் | ஆம் | |||||
1981 | மீண்டும் கோகிலா | ஆம் | [14] | |||||
1981 | ராஜ பார்வை | ஆம் | ||||||
1984 | புதியவன் | ஆம் | ஆம் | |||||
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | ஆம் | ||||||
1988 | சத்யா | ஆம் | ||||||
1988 | என் தமிழ் என் மக்கள் | ஆம் | ||||||
1989 | அபூர்வ சகோதரர்கள் | ஆம் | ||||||
1989 | சிவா | ஆம் | ||||||
1990 | உன்னைச் சொல்லி குற்றமில்லை | ஆம் | ||||||
1990 | கேளடி கண்மணி | ஆம் | [15] | |||||
1990 | மைக்கேல் மதன காமராஜன் | ஆம் | ||||||
1990 | ராஜா கைய வெச்சா | ஆம் | ||||||
1990 | ஒரு வீடு இரு வாசல் | ஆம் | ||||||
1990 | அஞ்சலி | ஆம் | ||||||
1991 | சிகரம் | ஆம் | ||||||
1991 | குணா | ஆம் | ||||||
1995 | சதி லீலாவதி | ஆம் | ||||||
1996 | கல்லூரி வாசல் | ஆம் | ||||||
1996 | காதல் பகடை | ஆம் | தொலைக்காட்சித் தொடர் | |||||
1997 | ஆஹா | ஆம் |