அனல் அரசு | |
---|---|
பிறப்பு | சி. எம். ஏ. அரசகுமார் 12 திசம்பர் 1970 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | சண்டை ஒருங்கிணைப்பாளர் நடிகர் |
அனல் அரசு என்பவர் திரைத்துறை சண்டை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய திரைப்படத்துறையிலும், இந்தி திரைப்படத் துறையிலும் பணியாற்றுகிறார். அனல் அரசுவின் இயற்பெயர் அரசகுமார் என்பதாகும்.
இவர் கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட சண்டை ஒருங்கிணைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். தொடக்கத்தில் சண்டை கலைஞராகவும், உதவியாளராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து 2004 இல் வெளிவந்த சத்திரபதி இவருடைய முதல் திரைப்படம் ஆகும்.[1]