அனிதா குப்தா Anita Gupta | |
---|---|
2022 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது பெறுகிறார். | |
தேசியம் | இந்தியா |
அனிதா குப்தா (Anita Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக தொழில்முனைவோர் ஆவார். இயற்கை விவசாயியாகவும் பழங்குடி ஆர்வலராகவும் இவர் இயங்கி வருகிறார். 50,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
குப்தா ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவராவார். தனது குழந்தைகளைப் பெற்றெடுக்க அழைத்துச் சென்ற பெண்ணை ஒரு தாத்தா அடிப்பதை இவர் கண்டார். சிறுமி கல்வியறிவு பெற்றிருந்தால், தாத்தாவின் துன்புறுத்தலை எதிர்க்க அவளுக்கு அதிகாரம் கிடைத்திருக்கும் என்று தான் நினைத்ததாக பின்னர் இவர் கூறினார். [1]
பீகாரில் உள்ள போச்பூரில் இருந்து அனிதா குப்தா வந்தார். அங்கு 50,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு [2] கைவினைப் பொருட்கள், குச்சிகள் மற்றும் நகைகள் உருவாக்குதல் ஆகிய தொழில்களில் பயிற்சி அளித்துள்ளார். [3]
1993 ஆம் ஆண்டு இவருக்கு பத்து வயதாக இருந்தபோது இவரும் இவரது சகோதரரும் போச்பூர் மகிளா கலா கேந்திரா என்ற அமைப்பை உருவாக்கினர், [1] அனிதா குப்தா பின்னர் இவ்வமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். [4] இவ்வமைப்பு பணம் சம்பாதித்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று சொல்லி பெண்களை பணம் சம்பாதிக்க ஈடுபட ஊக்குவிக்கும் அமைப்பாகும்.[1] அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறும் வகையில் சங்கமாகப் பதிவு செய்தபோது அமைப்பு மாற்றப்பட்டது. அர்ராவில் அமைந்துள்ள இந்த அமைப்பு 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறது. [3]</ref> அனிதாவின் நிறுவனம் டாடா சமூக அறிவியல் நிறுவனத்திலும், மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையரகத்திலும் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளப்பட்டது.[1]
2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று , இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி புரசுகார் விருதைப் பெற, புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனிதா குப்தா அழைக்கப்பட்டார். [3] இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, முந்தைய ஆண்டில் இவ்விருது எதுவும் வழங்கப்படவில்லை. அரசு கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு விருது பெற்றவர்களை அழைத்திருந்தது. குப்தா மற்றும் 28 பெண்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார். [3] விருதுக்கு முந்தைய நாள் இரவு. இவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்கள்.[5]