அனுபம் கார்க்கு Anupam Garg | |
---|---|
வாழிடம் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | வடமேற்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி, கோர்னெல் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | இலெகெட்டு-கார்க்கு சமமின்மை |
அனுபம் கார்க்கு (Anupam Garg) ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் நகரிலுள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் பேராசிரியராக உள்ளார். 1983 ஆம் ஆண்டு கார்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது முனைவர் பட்டத்தினப் பெற்றார். மூலக்கூற்று காந்தவியல் மற்றும் பெருநிலை குவாண்டம் நிகழ்வுகள் பிரிவில் இவரது பங்களிப்பிற்காக 2012 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் கழகத்தில் உறுப்பினர் தகுதியை அடைந்தார்.
அந்தோணி இயேம்சு இலெகெட்டு-அனுபம் கார்க்கின் பெயரிடப்பட்ட இலெகெட்டு-கார்க்கு கணிதச்சமமின்மை என்ற இயற்பியல் கோட்பாட்டுக்காக அனுபம் கார்க்கு நன்கு அறியப்படுகிறார்.[1] கார்க்-ஓனுச்சிக்-அம்பேகோகர் மாதிரி மின்சுமை பரிமாற்றத்திற்காகவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.[2] இவரது தற்போதைய ஆராய்ச்சி ஆர்வம் குவாண்டம் மற்றும் அரை பாரம்பரிய நிகழ்வுகளை மையமாக கொண்ட குவாண்டம் இயக்க சுழற்சியுடன் தொடர்புடையதாக உள்ளது.
அனுபம் கார்க் ஒரு பட்டதாரி இயற்பியல் பாடப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். பாரம்பரிய மின்காந்தவியல் ஒரு சுருக்கம் என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.[3]