அனுப்கர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் அனுப்கர் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 29°11′22″N 73°12′30″E / 29.18944°N 73.20833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
வருவாய் கோட்டம் | பிகானேர் |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | அனுப்கர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,693.79 km2 (1,812.28 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,98,478 |
• அடர்த்தி | 150/km2 (390/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
• அதிகம் பேசப்படுவது | பஞ்சாபி மொழி, பாக்ரி மொழி, இராஜஸ்தானி மொழி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | official website |
அனுப்கர் மாவட்டம் (Anupgarh district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளத்லு. இப்புதிய மாவட்டம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் தலைமையிடம் அனுப்கர் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் குடிநீருக்கு அனூப்கர் கால்வாய் உள்ளது
அனுப்கர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது.
அனுப்கர் மாவட்டம் 5 வருவாய் வட்ட்ங்களைக் கொண்டது[3]. அவைகள்:
2011ஆம் கணக்கெடுப்பின்படி, அனுப்கர் மாவட்டத்தி மக்கள் தொகை 698,478. ஆகும். அதில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 307,944 (44.09%) மற்றும் 3,760 (0.60%) ஆக உள்ளனர்.[4][5]இம்மாவட்டத்தில் இந்தி மொழியுடன், பஞ்சாபி மொழி, பாக்ரி மொழி, இராஜஸ்தானி மொழிகள் பேசப்படுகிறது. இந்துக்கள் 4,95,118, சீக்கியர்கல் 1,87,856, இசுலாமியர்கள் 13,832 மற்றும் பிறர் 1411 ஆக உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 69.91% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர்.
அனுப்கர் தொடருந்து நிலையம் 2 நடைமேடைகளைக் கொண்டது.[6]