அனுமன் நதி என்பது தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1] அனுமன் ஆறு மூலம் தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பாறு மூலம் 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. இது 14 அணைக்கட்டுகளை கொண்டுள்ளது.
இராமாயண காலத்தின் போது இராமன், இலட்சுமணனுடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தான். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.[2]
இங்கு நீராடி லிங்க பிரதிஷ்டை செய்ய ஒரு தினம் அகத்தியர் வந்தார். அப்போது அவருக்கு ஏழரைச் சனி காலம். அவர் லிங்கம் உருவாக்கும் போது அதன் மேலிருந்த புளியமரத்தின் மீது ஒரு தேனடை இருந்தது. அதிலிருந்த தேனைக் அகத்தியர் கை மீது கொட்ட வைத்தார் சனி பகவான். இதையறிந்த சிவபெருமான், ஏழரைச் சனியின் முதல் பாகம் முடிந்ததுமல்லாமல் தான் திருமணக் காட்சி காட்ட வேண்டியதால் அகத்தியரை விட்டு சனியை விலகச் சொன்னார். அதன்பின் சனி விலகியதால் தேனில் ஊறிய மணல் லிங்கம் கெட்டிப்பட்டு நின்றது. அதனால் அவருக்குத் தேனீசுவரர் என்று பெயர் வந்தது.[3]
சிற்றாறுக்கு மொத்தம் ஐந்து துணை ஆறுகளும் மூன்று இரண்டாம் நிலை துணையாறுகளும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,
ஆறு | மூல ஆறு/மலை | அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை | பாசன நில அளவு (எக்டேர்கள்) |
---|---|---|---|
சிற்றாறு | குற்றாலம் | 17 | 8903.27 |
ஐந்தருவி ஆறு | சிற்றாறு | 1 | 293.4 |
அரிகர ஆறு | சிற்றாறு | 7 | 445.10 |
குண்டாறு | அரிகர ஆறு | 7 (1) | 465.39 |
மொட்டையாறு | குண்டாறு | 1 (1) | 141.64 |
அழுதகன்னியாறு | சிற்றாறு | 8 | 827.47 |
அனுமன் நதி | சிற்றாறு | 14 | 4046.94 |
கருப்பாறு | அனுமன் ஆறு | 6 (1) | 3844.59 |
உப்போடை | சிற்றாறு | 2 | 445.16 |