அனுமோலு ராமகிருஷ்ணா Anumolu Ramakrishna | |
---|---|
பிறப்பு | புனடிபாடு, கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 20 திசம்பர் 1939
இறப்பு | 20 ஆகத்து 2013 | (அகவை 73)
படித்த கல்வி நிறுவனங்கள் | கிண்டி பொறியியல் கல்லூரி |
பணி | பொறியாளர் பெருநிறுவன நிர்வாகி |
செயற்பாட்டுக் காலம் | 1962–2013 |
அறியப்படுவது | லார்சன் அன்ட் டூப்ரோ கட்டுமான தொழில்நுட்பம் |
விருதுகள் | பத்ம பூசண் இந்தியக் காங்கிரீட்டு நிறுவன விருது டேவிட்சன் பிரேம் விருது சிறந்த பொறியியல் ஆளுமை விருது அழுத்தப்பட்ட கான்கிரீட் வடிவமைப்பு விருது ஹாசிப் சப்பா விருது |
அனுமோலு ராமகிருஷ்ணா (Anumolu Ramakrishna)(1939-2013) ஓர் இந்திய குடிசார் பொறியாளரும், பெருநிறுவன நிர்வாகியும் ஆவார். 2013 புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோவில் [1] துணை நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] இந்திய கட்டுமானத் துறையில் முன்தகைப்புக் காங்கிறீற்று [3] [4], முறையில் உற்பத்தியை அதிகரிக்க உதவினார்.[5] அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2014 ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் இவருக்கு பத்ம பூசண் விருதை இந்திய அரசு வழங்கியது.[6]