அனுராதா சாஹ்னி (Anuradha Sawhney) முன்னாள் தலைமைச் செயலாளராகவும், இந்திய பீட்டாவின் இந்திய நடவடிக்கைகளின் தலைவராகவும் இருந்தார். ஒரு விலங்கு உரிமை ஆர்வலரான இவர் விலங்கு உரிமைகள் இதழான அனிமல் டைம்ஸின் இந்திய பதிப்பின் ஆசிரியராக இருந்தார். [1]
இந்தியாவில் உள்ள விலங்குகள் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளையும் உள்ளடக்கிய ஊடக உறவுகள் மற்றும் நிர்வாகத்தை இவர் கவனித்தார். இவர் இந்தியாவில் விலங்குகள் உரிமைகள் மற்றும் நலன் பற்றிய சட்ட, ஆராய்ச்சி மற்றும் அறிக்கையிடல் பொறுப்பாளராக இருந்தார்
அனுராதா பொக்காரோவில் வளர்ந்தார். அங்கு இவர் புனித சேவியர் ஆங்கிலப் பளியிலும் ,பின்னர், மும்பையின் சோபியா கல்லூரியிலும் பயின்றார். அங்கு தான் சந்தித்த பல்வேறு விலங்குகளுக்கு உணவளித்தார். சாலையோரத்தில் இறந்து கிடந்த கன்று உட்பட புறக்கணிக்கப்பட்ட மற்றும் தவறாக நடத்தப்பட்ட பல்வேறு விலங்குகளையும் இவர் கவனித்துக்கொண்டார்.
விலங்கு உரிமைகள் பற்றி பேசுவதற்கு இவர் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்.. ரவீனா டாண்டன், மாதவன், [2] செலினா ஜெட்லி , ஷில்பா ஷெட்டி போன்ற பிரபலங்களுடன் பணியாற்றுவதிலிருந்து கொடுமையை விசாரிக்க மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விலங்குகளை மீட்பது, உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் வெளிவருவது வரை பீட்டாவுடனான இவரது பணி பரவலாக வேறுபடுகிறது. பெமினா பத்திரிகையின் "50 மிக சக்திவாய்ந்த பெண்கள்" என்று பட்டியலிடப்பட்ட இவர், 2009 ஆம் ஆண்டு மகளிர் சாதனையாளர் விருது உட்பட பல கௌரவங்களைப் பெற்றார்.
இவர் சைவ உணவு உண்பவராக வளர்க்கப்படவில்லை ஆனாலும் உணவுத் தொழிலில் விலங்குகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தவுடன் இவர் சைவ உணவை உண்பவர்களில் ஒன்றானார். இவர் கூறினார்: இவைகள் கோழிகளாகவோ அல்லது பன்றிகளாகவோ அல்லது பசுக்களாகவோ பிறந்த காரணத்தால், இந்த விலங்குகளுக்கு இயற்கையான அனைத்தும் மறுக்கப்படுகின்றன. கோழிகள் தங்கள் குறுகிய வாழ்க்கையை நெரிசலான சூழ்நிலையில் செலவிடுகின்றன; அவைகளின் வசிப்பிடம் மிகவும் குறுகலாக இருப்பதால் அவைகளால் திரும்பவோ அல்லது இறக்கையை விரிக்கவோ முடியாது. பெரும்பாலானவைகளை தூக்கிக்கொண்டு சரக்கு வாகனங்களில் ஏறி இறங்கும் வரை புதிய காற்றை சுவாசிப்பதில்லை. தலைகீழாக தொங்கவிடப்பட்டு, அவைகளின் தொண்டைகள் வெட்டப்படுகின்றன. பெரும்பாலும் அவை உயிருடன் இருக்கும்போதே. "
இவர் சைவ வாழ்க்கை முறையின் நன்மைகளைப் பற்றி கற்பிக்கும் பீட்டா இந்தியாவின் சைவ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
அனுராதாவின் தலைமையின் கீழ், பீட்டா இந்தியா, இந்தியாவின் முன்னணி விலங்கு உரிமைகள் அமைப்பாக உருவெடுத்தது. இது லிம்கா சாதனைகள் புத்தகத்தால் தொடர்ந்து 2 பதிப்புகளில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியத் தர நிர்ணயக் குழுவின் உணவு மற்றும் வேளாண் பிரிவில் சேர பீட்டா அழைக்கப்பட்டது.
இந்திய தோல் தொழிற்துறையிலிருந்து (40 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் சர்வதேச அளவில் இந்திய தோல் புறக்கணிப்புக்கு வழிவகுத்தது), பால் தொழில் மற்றும் கோழித் தொழிலில் இருந்து விலங்குகளை விடுவிப்பதற்காக போராடுவதில் இவர் தீவிரமாக பங்கேற்றுள்ளார். நாடு முழுவதும் உள்ள சர்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காக்களில் இருந்து சிங்கங்கள் மற்றும் புலிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட விலங்குகளை பீட்டா இந்தியா மீட்டுள்ளது அல்லது மீட்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மும்பை நகரத்திலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் 16 பிற மாநிலங்களும் இதைப் பின்பற்றி இதே போன்ற சட்டத்தை நிறைவேற்றியது.[3]