அனூப் மேனன் | |
---|---|
பிறப்பு | 3 ஆகத்து 1976[1] கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | திருவனந்தபுரம், அரசு சட்டக் கல்லூரி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2002 – தற்போது வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | சீமா அலெக்சாந்தர் (தி. 2014) [2] |
உறவினர்கள் | சுவேதா மேனன் (உறவினர்) |
அனூப் மேனன் (Anoop Menon) (பிறப்பு: ஆகத்து 3, 1976) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், பாடலாசிரியருமாவார். மலையாளத் திரைப்படத்துறையில் நடிகராக வெற்றியைக் கண்டறிவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சியில் பணியாற்றினார்.
இவர், சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும், "திரக்கதா" என்ற படத்தில் திரைப்பட நட்சத்திரம் அஜயச்சந்திரனாக நடித்ததற்காக தென்னிந்திய பிலிம்பேர் விருதினையும் வென்றார். பகல் நட்சத்திரங்கள் (2008), காக்டெய்ல் (2010), பியூட்டிபுல் (2011), திருவனந்தபுரம் லாட்ஜ் (2012), ஹோட்டல் கலிபோர்னியா (2013) போன்ற படங்களுக்கு திரைக்கதையையும், உரையாடலையும் எழுதினார். நடிகை சுவேதா மேனன் இவரது உறவினராவார்.[3]
இவர், பி. கங்காதரன் நாயர் மற்றும் இந்திரா மேனன் ஆகியோருக்கு 1976 ஆகத்து 3 அன்று கோழிக்கோட்டில் பிறந்தார் .[4] திருவனந்தபுரத்தில் வளர்ந்த இவர், திருவனந்தபுரம் (1994 – 99) அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டதாரியாக, கேரள பல்கலைக்கழகத்தில் முதல் இடத்தைப் பிடித்தார்.[5] இந்த காலகட்டத்தில், iவர் கைரளி தொலைக்காட்சியிலும், சூர்யா தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[6] இந்த காலத்தில் சக திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சங்கர் ராமகிருட்டிணனை சந்தித்தார். இவர்கள் இருவரும் புகழ்பெற்ற மலையாள இயக்குநர் இரஞ்சித்தின் கீழ் இணைந்தனர். 2014 திசம்பர் 27 அன்று சீமா அலெக்சாந்தர் என்பவரை மணந்தார். இது சீமாவின் இரண்டாவது திருமணமாகும். சீமாவின் முதல் கணவர் மாரடைப்பால் 2006 இல் இறந்தார். அவருக்கு 2002 இல் பிறந்த ஒரு மகள் உள்ளார்.[7][8]
மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஏசியாநெட்டில் "ஸ்வப்னம்", "மேகம்" என்ற இரண்டு பிரபலமானத் தொடர்களில் இவர் தனது பாத்திரங்களுக்காக பிரபலமடைந்தார். முந்தையது கே. கே. ராஜீவ் இயக்கியது. "பகல் நட்சத்திரங்கள்" என்ற படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். மோகன்லால் தந்தையாகவும், இவர் அவரது மகனாகவும் நடித்திருந்தனர்.[9]
2008 ஆம் ஆண்டில் இயக்குநர் இரஞ்சித் இயக்கியிருந்த "திரக்கதா" என்ற படத்தில் திரைப்பட நட்சத்திரம் "அஜய் சந்திரன்" என்ற முக்கிய கதாபாத்திரத்தில் என்ற திரைப்பட நட்சத்திரத்தின் வாழ்க்கையின் பல அம்சங்களை மேனன் சித்தரித்தார். இவருடன் பிரியாமணியும், பிரித்விராஜ் சுகுமாரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.[10] பிறகு, மேனன் பல படங்களில் குறிப்பிடத்தக்கவராக ஆனார். ஒலிபெருக்கி, கேரள கஃபே, காக்டெய்ல், போக்குவரத்து மற்றும் பிராணயம் ஆகிய படங்களில் நடித்தார்.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)