தைப்பிங் அனைத்து புனிதர் ஆலயம் All Saints' Church, Taiping | |
---|---|
அனைத்து புனிதர் ஆலயம் | |
அமைவிடம் | 17-ஏ, தாமிங் சாரி தெரு, 34000 தைப்பிங், பேராக் |
நாடு | மலேசியா |
சமயப் பிரிவு | ஆங்கிலிக்கம் |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1886 |
Architecture | |
செயல்நிலை | செயலில் உள்ளது |
கட்டடக் வகை | கோதிக் |
நிருவாகம் | |
Province | தென் கிழக்கு ஆசியாவின் மாகாண திருச்சபை |
Synod | மேற்கு மலேசியாவின் மறைமாவட்டம் |
தைப்பிங் அனைத்து புனிதர் ஆலயம் (ஆங்கிலம்: All Saints' Church, Taiping) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம், தைப்பிங் நகரில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும்.
இது மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் முதன்முதலாக நிறுவப்பட்ட தேவாலயமாகும். 1886-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, 1887-ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது.
தாமிங் சாரி பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த தேவாலயம், தைப்பிங் நகரத்தின் புறப்பகுதியில் உள்ளது.