அன்சல் | |
---|---|
ஆள்கூறுகள்: 08°55′45″N 76°55′05″E / 8.92917°N 76.91806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• நிர்வாகம் | பஞ்சாயத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 24.45 km2 (9.44 sq mi) |
ஏற்றம் | 45 m (148 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 33,088 |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம் Other Languages: ஆங்கிலம், தமிழ், இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 691306 |
தொலைபேசி குறியீடு | 0475 |
வாகனப் பதிவு | KL-25 |
District | Kollam |
Civic agency | பஞ்சாயத்து |
தட்பவெப்ப நிலை | Monsoon (Köppen) |
எழுத்தறிவு | 95% |
அன்சல் (Anchal) என்பது இந்தியாவின் கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும் [1], [2] இது தேசிய நெடுஞ்சாலை 744 மற்றும் முதன்மை மைய சாலை ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு மாதத்திற்கு இருமுறை நடக்கும் கால்நடைச் சந்தை மிகப் பிரபலமானது
இப்பகுதி அன்சல் என்ற பெயர் பெற்றது குறித்து பல்வேறு பழங்கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று என்னவென்றால் இப்பகுதியில் ஐந்து ஆல மரங்கள் இருந்தனவென்றும் அதனால் அஞ்சு-ஆல் என்று பெயர் பெற்றதாகவும் அதன் மருவுதான் அன்சல் என்பது என்று கூறப்படுகிறது.
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் புனலூர் தொடருந்து நிலையம் மற்றும் கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவை முறையே 14 கி.மீ மற்றும் 39 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையமானது பரப்பளவில் கேரளத்தின் இரண்டாவது பெரிய நிலையமாகும், மேலும் இது பழமையான நிலையங்களில் ஒன்றாகும். [3] அருகிலுள்ள சர்வதேச வானூர்தி நிலையம் 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது கேரள மாநிலத்தின் முக்கிய சர்வதேச வானூர்தி நிலையமாகும், இங்கு தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. [4] அன்சல் தேசிய நெடுஞ்சாலை 744 மற்றும் பிரதான மத்திய சாலை ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் அன்சல் மற்றும் பிற கிராமங்களுக்கு இடையே பல பேருந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
2011 ஆம் ஆண்டய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அன்சலின் மக்கள் தொகை 33,088 ஆகும், இதில் 15,732 ஆண்கள் மற்றும் 17,356 பெண்கள். கல்வியறிவு விகிதம் 95%, ஆண்களில் 96.7% பேரும், பெண்கள் கல்வியறிவு 93.49% பேரும் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1] வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 11,960 பேர் ஆவர். இவர்களில் 71% ஆண்கள் 29% பெண்கள் ஆவர். [5]
அன்சலிலி உள்ள பகவதி அம்மன் கோயில் முடி திருவிழாவானது மாமாங்கத்துக்கு (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) ஒருமுறை நடக்ககூடியது.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)