தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 ஆகத்து 2001 நிதானி கிராமம், ஜிந்து மாவட்டம், அரியானா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 3 அங்குலம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | கட்டற்ற வகை மல்யுத்தம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 57 கி.கி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்லூரி அணி | சவித்ரி பரத் சிங் நினைவு விளையாட்டுப் பள்ளி, நிதானி, இயிந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | ராமச்சந்திர பவார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
}} அன்சு மாலிக்கு (Anshu Malik) இந்தியாவிலுள்ள அரியானா மாநிலத்தின் இயிந்து மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மல்யுத்த வீரராவார் . கட்டற்ற வகை மல்யுத்தப் போட்டிகளில் இவர் பங்கேற்று வருகிறார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீரர்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் அன்சு மாலிக் பிறந்துள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள நிதானி கிராமத்தில் அமைந்துள்ள சவுத்ரி பரத்சிங் நினைவு விளையாட்டுப் பள்ளியில் சகதீசு என்ற மல்யுத்தப் பயிற்சியாளரிடம் அன்சு பயிற்சி பெற்றார். அன்சுவின் தந்தையான தரம்வீர் மாலிக்கு ஒரு பன்னாட்டு மல்யுத்த வீரராவார். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் இவர் பணியாற்றினார். படைப்பயிற்சியாளர்களுக்கான மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் அன்சு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். [1][2][3]
2020 ஆம் ஆண்டு இந்தியாவின் புதுதில்லியில் நடைபெற்ற 2020 ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அன்சு மாலிக் வெண்கலப் பதக்கங்களில் ஒன்றை வென்றார். [4] இதே ஆண்டில் செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற 2020 தனிநபர் மல்யுத்த உலகக் கோப்பையிலும் பெண்கள் 57 கிலோ போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். [5][6]
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் வினேசு போகாட்டு மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோருடன் சேர்ந்து அன்சு மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். [7]
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)