அன்சுலா காந்த் | |
---|---|
உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 அக்டோபர் 2019 | |
குடியரசுத் தலைவர் | டேவிட் மால்பாஸ் |
முன்னையவர் | கிரிஸ்டியானா ஜியார்ஜியாவா (தலைமை நிர்வாகி ) |
பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை செயல் அலுவலர் | |
பதவியில் 7 செப்டம்பர் 2018 – 31 ஆகத்து 2019 | |
முன்னையவர் | பி. சிறீராம் |
பின்னவர் | சிறீ குப்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 7, 1960 ரூர்க்கி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | வங்கியாளர் |
அன்சுலா காந்த் (Anshula Kant) (பிறப்பு: செப்டம்பர் 7, 1960) உலக வங்கி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனருமாகவும் 12 சூலை 2019 அன்று நியமிக்கப்பட்டார். [1] [2] [3] இவர் இந்தியாவின் ரூர்க்கியைச் சேர்ந்தவர் .
1979 ஆம் ஆண்டில் புது தில்லி, லேடி சிறீ ராம் மகளிர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1981 ஆம் ஆண்டில், இவர் பொருளியியல் பள்ளியிலிருந்து பொருளாதாரத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். <[1] வங்கியாளர் நிறுவனத்தில் இவர் சானறளிக்கப்பட்ட கூட்டாளர் ஆனார்.[4]
1983 ஆம் ஆண்டில், இவர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு அதிகாரியாக சேர்ந்தார். இவர் வங்கியின் மகாராட்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் தலைமை பொது மேலாளராகவும், தேசிய வங்கி குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநராகவும், வங்கியின் சிங்கப்பூர் கிளையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார். [4] செப்டம்பர் 2018 இல், இவர் இரண்டு வருட காலத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், வாரிய உறுப்பினராகவும் ஆனார். [1][5][6]
2019 12 சூலை அன்று, இவர் உலக வங்கி குழுவின் தலைமை நிதி அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். மேலும் இருப்புநிலை மற்றும் நிதி மற்றும் இடர் மேலாண்மைக்கு பொறுப்பாக இருந்தார்.[7]
காந்த் உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த பட்டய கணக்காளர் சஞ்சய் காந்தை மணந்தார். இவருக்கு சித்தார்த் என்ற மகனும், நுபூர் எனறா ஒரு மகளும் உள்ளனர். [1][8]