அன்னவரம் | |
---|---|
அடைபெயர்(கள்): கிராமம் | |
ஆள்கூறுகள்: 17°16′55.16″N 82°24′19.89″E / 17.2819889°N 82.4055250°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி மாவட்டம் |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,865 |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 533406 |
தொலைபேசி குறியீடு | +91–8868 |
வாகனப் பதிவு | ஏபி |
அன்னவரம் (Annavaram) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் அமைந்துள்ள ஒரு கோயில் நகரமாகும். இது பம்பா ஆற்றின் கரையில் உள்ளது. [2] இந்த கிராமத்தில் இரத்னகிரி மலையில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வீர வேங்கட சத்தியநாராயணன் கோயில் உள்ளது.
அன்னம் என்றச் சொல்லுக்கு தெலுங்கில் உணவு என்று பெயர். உள்ளூர் மொழி மற்றும் அந்த இடம் உணவு விநியோகத்திற்காக அறியப்பட்டது. இது குடியேற்றத்திற்கு அதன் பெயரை அன்னவரம் என்று கொடுத்திருக்கலாம். [3]
தேசிய நெடுஞ்சாலை எண் 16 இக்கிராமம் வழியாக செல்கிறது. ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அன்னவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது. [4] ஹவுரா-சென்னை பிரதான பாதையில் அன்னாவரம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது தென் மத்திய தொடருந்து மண்டலத்தின் விஜயவாடா இருப்புப்பாதைப் பிரிவில் பி-வகை நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [5]