அன்னீலா இசபெல் சார்ஜண்ட் Anneila Isabel Sargent FRSE DSc | |
---|---|
![]() | |
பிறப்பு | அன்னீலா கேசல்சு 1942 (அகவை 82–83) கிர்கால்டி, இசுகாட்லாந்து |
தேசியம் | இசுகாட்டியர் |
துறை | விண்மீன் உருவாக்கம் |
கல்வி கற்ற இடங்கள் | எடிம்பர்கு பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் |
விருதுகள் | நாசா பொதுப்பணி பதக்கம் கால்டெக் ஆண்டுப் பெண் விருது 2002 ஆம் ஆண்டு எடின்பர்கு பல்கலைக்கழக முண்ணாள் மாணவர் விருது |
துணைவர் | வாலேசு எல். டபுள்யூ. சார்ஜண்ட் |
பிள்ளைகள் | 2 daughters |
பேராசிரியர் அன்னீலா இசபெல் சார்ஜண்ட் (Anneila Isabel Sargent) ஆ அ க எ (FRSE), முதுமுனைவர், (பிறப்பு: அன்னீலா கேசல்சு, 1942, கிர்கால்டி) இசுகாட்டிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் உருவாக்கத்தில் சிறப்பு புலமையாளர் ஆவார்.
இவர் பிஃபேவில் உள்ள பர்ண்டிசுலாந்தில் வளர்ந்தார். இவர் பர்ண்டிசுலாந்து தொடக்கநிலைப் பள்ளியிலும் கிர்கால்டி உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார்.[1] இவர் 1963 இல் எடிபர்கு பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் தகைமை பட்டத்தை இயற்பியலில் பெற்றார். பிறகு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். முதலில் இவர் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பின்னர் இவர் 1967 இல் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் படித்து முனைவர் பட்டம் பெற்றார்.[1][2] இப்போது இவர் கால்டெக்கில் இரா எசு. போவன் பேராசிரியராகவும் உள்ளார். இவர் ஓவன்சு வேல்லி கதிரியல் வான்காணகத்திலும் மில்லிமீட்டர் அலை வானியல் ஆராய்ச்சிக்கான கூட்டு அணியிலும் இயக்குநராக இருந்துள்ளார்.[1][3] இவர் 2000 முதல் 2002 வரை அமெரிக்க வானியல் கழகத் தலைவராக இருந்தார். பிறகு அதன் மன்றத்தில் தொடர்ந்தார்.[1][2] இவர் 2007 திசம்பர் 1 இல் இருந்து 2016 வரை கால்டெக்கில் மாணவர் செயல்பாடுகளின் துணைத்தலைவராக் இருந்தார்.
குடியரசுத் தலைவர் ஒபாமா இவரை 2011 இல் தேசிய அறிவியல் குழுமத்தில் ஆராண்டுகளுக்குப் பணிபுரிய அமர்த்தினார்.[4] இவர் மெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்றத்திலும் வானியல், வானியற்பியல் குழுவிலும் தேசிய அறிவியல் அறக்கட்டளையிலும் கணித, இயற்பியல்சார் புலங்களின் அறிவுரைக் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். இவர் 1995/6 இல் தேசிய கதிர்வானியல் நோக்கீட்டக வருகைக் குழுவின் தலைமையேற்றுள்ளார்.[2] இவர் நாசாவின் விண்வெளி அறிவியல் அறிவுரைக் குழுவின் தலைமையை 1994 இல் இருந்து ஏற்றுள்ளார்.[2] இவர்மில்லிமீட்டர் அலை வானியல் ஆராய்ச்சிக்கான கூட்டு அணியிலும் இயக்குநராகவும் இருந்துள்ளார் (CARMA).[5]
இவர் நாசா பொதுப்பணி பதக்கத்தையும் 1998 ஆம் ஆண்டுக் கால்டெக் மகளிர் விருதையும் வென்றுள்ளார்.[1] சிறுகோள் 18244 அன்னீலா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. எடின்பர்கு பல்கலைக்கழகம் 2002 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் விருதையும் 2008 இல் தகைமை முதுமுனைவர் பட்ட்த்தையும் இவருக்கு வழங்கியது.[1][6] இவரை 2017 இல் எடின்பர்கு அரசு கழகம் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்தது.[7]
இவரது கணவர் சமகால வானியலாளரான வாலேசு எல். டபுள்யூ. சார்ஜண்ட் ஆவார்.[8]