அன்னே காச்சிர் Anne Kajir | |
---|---|
பிறப்பு | 1974 |
தேசியம் | பப்புவா நியூ கினி |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | சுற்றுச்சூழலியலாளர் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2006) |
அன்னே காச்சிர் (Anne Kajir) பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞராவார். இவர் 1974 ஆம் ஆண்டு பிறந்தார். வெப்பமண்டல காடுகளில் சட்டவிரோதமாக உள்நுழைய அனுமதித்தது தொடர்பாக பப்புவா நியூ கினியா அரசாங்கத்தில் பரவலாக ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை இவர் கண்டுபிடித்தார்.
போர்ட் மோரெசுபியில் இருக்கும் சுற்றுச்சூழல் சட்ட மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கச்சீர் பணியாற்றியுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களின் பெரிய அளவிலான, சட்டவிரோத காடழிப்பு நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில் உச்சநீதிமன்ற வழக்கில் தலைமை வழக்கறிஞராக இருந்தார்.
1980 ஆம் ஆண்டுகளில் தொழில்துறை ஆதிக்கம் என்பது பப்புவா நியூ கினியாவின் வெப்பமண்டல காடுகளை கடுமையாக குறைத்து சேதப்படுத்தியது. உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களை எதிர்த்து இவர் மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]