அன்னை தெரசா சதுக்கம் (Mother Teresa Square) அல்பேனியா நாட்டில் திரனாவில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய சதுக்கம் ஆகும். இச்சதுக்கம், அல்பேனிய நாட்டின் ரோமன் கத்தோலிக்க துறவியும், நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரேசாவின் பெயரிடப்பட்டுள்ளது.[1].
இச்சதுக்கம் இத்தாலிய கட்டிடக் கலை நிபுணர் கிரார்டோ போசியோ என்பவரால் திட்டமிடப்பட்டு, அல்பேனியா இத்தாலிய ஆளுகைக்கு உட்பட்ட 1930-1940 காலகட்டத்தில் பகுத்தறிவிய பாணியில் கட்டப்பட்டது. முதலில், இதற்கு இத்தாலிய மன்னர் மூன்றாம் விக்டர் இமானுவேல் நினைவாக மூன்றாம் விக்டர் இமானுவேல் சதுக்கமெனப் பெயரிடப்பட்டது[2].
இது டெசுமோரெட் எ காம்பிட் பொலிவர்டின் வடகோடியில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி திரானா பல்கலைக்கழகம், பல்நோக்குப் பல்கலைக்கழகம், கலைப் பல்கலைக்கழகம், தொல்லியல் அருங்காட்சியகம், அல்பேனியா கல்வி மையம் ஆகியவை அமைந்துள்ளன.
1980 ல் சதுக்கத்தின் நடுவில் நீரூற்று அமைக்கப்பட்டு, கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின் அன்னை தெரசாவின் பெயரிடப்பட்டது. கிழக்கு மூலையில் அன்னை தெரசா உருவச் சிலை அமைக்கப்பட்டது. பின்னர் 2014 ல் போப்பாண்டவர் பிரான்சிசுவின் வருகைக்காக புதுப்பிக்கப்பட்டபோது சிலையும் நீரூற்றும் அகற்றப்பட்டது. தற்போது இது பொதுமக்களின் நடைபயிற்சிக்காகவும் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளுக்காகவும் திரனா நகராட்சியால் பயன்படுத்தப்படுகிறது.[3]
Remember, brother, I am a missionary and so are you
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)CS1 maint: unrecognized language (link)