அன்பானவன் அசராதவன் அடங்காதவன் Anbanavan Asaradhavan Adangadhavan | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆதிக் ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | மைக்கேல் ராயப்பன் |
கதை | ஆதிக் ரவிச்சந்திரன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கிருட்டிணன் வசந்து |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | மைக்கேல் ராயப்பன் |
விநியோகம் | டி வரிசை |
வெளியீடு | சூன் 23, 2017(இந்ந்தியா) |
ஓட்டம் | 160 நிமிடங்கள் [1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (திரைப்படம்) (Anbanavan Asaradhavan Adangadhavan) 2017ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி எசு. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் ஓர் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். சிலம்பரசன் மூன்று வேடங்களில் சிரேயா சரன் மற்றும் தமன்னாவுடன் நடித்துள்ளார். மகத் ராகவேந்திரா, கணேசு, மகேந்திரன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2]. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிருட்டிணன் வசந்த் மற்றும் ரூபன் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை கையாண்டனர்.[3]