அன்புச் சகோதரர்கள் | |
---|---|
இயக்கம் | லட்சுமி தீபக் |
தயாரிப்பு | கனகசபை ஜெயந்தி பிலிம்ஸ் |
கதை | மூலக்கதை: எம். பிரபாகர் ரெட்டி |
வசனம் | ஏ. எல். நாராயணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெய்சங்கர் எஸ். வி. ரங்கராவ் மேஜர் சுந்தர்ராஜன் ஏ. வி. எம். ராஜன் ஜமுனா (நடிகை) தேவிகா வெண்ணிற ஆடை நிர்மலா |
ஒளிப்பதிவு | வி. ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | கோட்டகிரி கோபால்ராவ் |
நடன அமைப்பு | சலீம் |
வெளியீடு | மே 5, 1973 |
ஓட்டம் | 03:10 |
நீளம் | 4747 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புச் சகோதரர்கள் (Anbu Sagodharargal) 1973 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] லட்சுமி தீபக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், ஏ. வி. எம். ராஜன், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் இயக்குநர் லக்ஷ்மி தீபக்கால் ஏற்கனவே தெலுங்கில் தயாரித்து இயக்கிய பண்டடாட்டி கப்புரம் என்ற படத்தின் தழுவலாகும்.
இப்படம் நான்கு சகோதரர்கள் குறித்த கதையாகும். மூத்த அண்ணண் ஒரு விவசாயி (எஸ். வி. ரங்கராவ்) அடுத்தவர் ஒரு ஆலை தொழிலாளி (மேஜர் சுந்தரராஜன்) இவர்களின் உதவியால் மூன்றாவது சகோதரர் (ஏ. வி. எம். ராஜன்) இந்திய ஆட்சிப் பணியாளாராகிறார். கடைசி சகோதரர் கல்லூரி மாணவர் (ஜெய்சங்கர்) அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அப்போது ஒரு பெண் வஞ்சினத்துடன் அக்குடும்பத்துக்குள் வருகிறாள் குடும்பத்துக்குள் குழப்பங்களை உருவாக்குகிறாள். இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை.
இப்படதிற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[3]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"எதிர் பார்த்தேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | வாலி | 03:59 |
"உங்களுக்காச்சு எங்களுக்காச்சு" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி, குழுவினர் | 04:12 | |
"முத்துக்கு முத்தாக" (மகிழ்ச்சி) | கண்டசாலா | கண்ணதாசன் | 03:57 |
"அம்மம்மா அம்மம்மா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி | வாலி | 03:47 |
"முத்துக்கு முத்தாக" (சோகம்) | கண்டசாலா | கண்ணதாசன் | 02:56 |