அன்விதா அப்பி | |
---|---|
சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அப்பி. | |
பிறப்பு | 9 சனவரி 1949 ஆக்ரா, ஐக்கிய மாகாணம், இந்திய ஒன்றியம் |
பணி | அறிஞர், மொழியிலாளர் |
விருதுகள் | பத்மசிறீ ராஷ்டிரிய லோக் பாசா சம்மான் |
வலைத்தளம் | |
www.andamanese.net |
பேராசிரியர் அன்விதா அப்பி (Anvita Abbi; பிறப்பு 9 சனவரி 1949) ஓர் இந்திய மொழியியலாளரும் சிறுபான்மை மொழிகளின் அறிஞரும் ஆவார். இவர் தெற்கு ஆசியாவின் பழங்குடி மொழிகள் மற்றும் பிற சிறுபான்மை மொழிகள் பற்றிய ஆய்வுகளுக்கு பெயர் பெற்றவர்.[1] மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசு 2013 ஆம் ஆண்டில், நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[2]
அன்விதா அப்பி 9 சனவரி 1949, அன்று [3][4] தாஜ் மகால் அமைந்துள்ள நிலத்தில் ஆக்ராவில், பல இந்தி எழுத்தாளர்களை உருவாக்கிய ஓர் குடும்பத்தில் பிறந்தார்.[5] உள்ளூர் நிறுவனங்களில் பள்ளிப்படிப்புக்குப் பிறகு, அன்விதா 1968 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.[3][4] அதைத் தொடர்ந்து, 1970இல் அதே பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதல் தரத்துடன் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3][4] 1975 இல் முனைவர் பட்டம் பெற தனது அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்தார்.[6] முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு பொது மொழியியல் மற்றும் தெற்காசிய மொழியியலில் சிறுபான்மை மொழிகள் ஆகியவற்றைப் பற்றி இருந்தது.[3][4] மொழியியல் மையம், மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் மையத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றினார்.[7] அப்பி புது தில்லியில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தட்சிணாபுரம் வளாகத்தில் வசிக்கிறார்.[3][4]
இந்தியாவில் உள்ள ஆறு மொழிக் குடும்பங்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்காக அன்விதா அப்பி பாராட்டப்படுகிறார்.[7] பெரிய அந்தமானின் மொழிகள் மற்றும் கலாச்சாரம், அழிந்து வரும் மொழிகள் ஆவணப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இலண்டன் பெரிய அந்தமான் பல்கலைக்கழகத்தின் மறைந்துவரும் குரல்கள் பற்றிய திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் விரிவான ஆராய்ந்தார்.[8][9][10][11] இந்தியாவின் ஆறாவது மொழி குடும்பம் என்ற கருத்தை ஊக்குவித்த ஜராவா மற்றும் [[ஒன்கே மொழி| ஆகிய இரண்டு பெரிய அந்தமானிய மொழிகளின் தனித்துவமான பண்புகளை அடையாளம் காண 2003-2004இல் இவரது ஆய்வுகள் உதவின.[8][12] பிற அறிஞர்களின் அந்தமானியப் பழங்குடிகள் பற்றிய ஆய்வுகள் அப்பியின் இரண்டு தனித்துவமான ஒருமைப் பண்புக் குழுக்களை கண்டறிவதன் மூலம் அப்பி கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது 31 மற்றும் எம் 32.[7]
அப்பி நிர்வாக மற்றும் கல்வி நிலைகளில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தற்போதைய நிலை: இயக்குநர், வாய்வழி மற்றும் பழங்குடியினர் இலக்கிய சாகித்திய அகாதமி, புது தில்லி இந்தியா. துணைப் பேராசிரியர், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், பிரித்தானிய கொலம்பியா, வான்கூவர், கனடா மற்றும் இந்திய மொழியியல் சமூகத்தின் தலைவர்.[13] ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (2002 முதல்) மற்றும் சாகித்திய அகாதமி போன்ற நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் திராவிட மொழியியல் சங்கத்தின் இந்திய மொழியியல் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும், இந்திய மொழியியல் (1991-95) மற்றும் சர்வதேச திராவிட மொழியியல் இதழ் (1992-96) ஆகிய இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அமர்ந்திருக்கிறார்.
அன்விதா அப்பி, அமெரிக்காவின் மொழியியல் சங்கம் [6] கனடாவில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற சமூகமான டெர்ராலிங்குவாவின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர், யுனெஸ்கோவின் ஆலோசனை குழுவிலும் உள்ளார்.[6][7] இவர் 1998-2008 இல் டெர்ராலிங்குவாவின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[6]