அபய் மற்றும் ராணி பாங் Abhay and Rani Bang | |
---|---|
![]() | |
பிறப்பு | வர்தா மற்றும் சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | ![]() |
படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாக்பூர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் |
பணி | சமூகப் பணிகள் |
அறியப்படுவது | சமூகப் பணி, சமூக சுகாதாரம், போதை மறுவாழ்வு, வீட்டில் பிறந்த குழந்தை பராமரிப்பு |
பிள்ளைகள் | ஆனந்த் பாங், அம்ருத் பாங் |
விருதுகள் |
|
புகழ்ப்பட்டம் | பத்மசிறீ |
அபய் பாங் மற்றும் ராணி பாங் (Abhay and Rani Bang) ஆகிய இருவரும் இந்தியாவிலுன் மகாராட்டிராவிலுள்ள கட்சிரோலி மாவட்டத்தில் பணிபுரியும் ஆர்வலர்கள் மற்றும் சமூக சுகாதார ஆய்வாளர்கள் ஆவர். 2018இல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது, 2018[1]
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் செயல்படுத்தப்படும் குழந்தை இறப்பு வீதங்களை கணிசமாகக் குறைத்த ஒரு திட்டத்தை இவர்கள் ஒன்றாகக் கண்காணித்தனர்.[2] [3] அபய் மற்றும் ராணி ஆகிய இருவரும் கிராமப்புற சுகாதார சேவை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சமூக ஆரோக்கியத்திற்கான கல்வி, செயல் மற்றும் ஆராய்ச்சிக்கான இலாப நோக்கற்ற சங்கத்தை நிறுவினர்.
இவர்கள் மகாராட்டிரா பூசண் விருதை வென்றுள்ளனர். மேலும் இலக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.[4][5] மும்பையில் உள்ள எஸ். என். டி. டி மகளிர் பல்கலைக்கழகமும் ராணி பேங்கிற்கு கௌரவ விருது வழங்கியுள்ளது.[6] உலகின் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கல்வி மற்றும் மருத்துவ இதழ்களில் ஒன்றான தி லான்செட் இவர்களை "கிராமப்புற இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பின் முன்னோடிகள்" என்று விவரித்தது.[7] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் சர்வதேச சுகாதாரத் துறையின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை இவர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் தொழில் வாழ்க்கையின் போது, சமூக அடிப்படையிலான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் ஒரு மறுமலர்ச்சியை வளர்க்க உதவியுள்ளனர்.[8] 2016 ஆம் ஆண்டில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இவர்களுக்கு புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.[9]
மே 2017 இல், மகாராட்டிரா மாநிலத்தில் குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க பம்பாய் உயர் நீதிமன்றம் அபய் பாங்கை அழைத்தது. இவர் அளித்த பரிந்துரைகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மாநில அரசுக்கு அதன் கொள்கை முடிவுகளில் பரிந்துரைகளை இணைத்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டது.[10]