அபரந்தா (Aparanta) அல்லது அபரந்தகா ("மேற்கு எல்லை" என்று பொருள்படும்) பண்டைய இந்தியாவின் புவியியல் பகுதியாகும். இது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கொங்கண் பகுதியின் வடக்குப் பகுதியை ஒத்திருந்தது. ஆங்கிலேயரிடம் அரசு ஊழியராக இருந்து வரலாற்று ஆசிரியராக மாறிய ஜே.எப். ப்ளீட், அபரந்தா பகுதியில் கொங்கணைத் தவிர கதியாவாட், கட்ச் மற்றும் சிந்து ஆகியவையும் அடங்கும் என்று நம்பினார். இருப்பினும், அபரந்தாவின் பரப்பளவு மிகவும் சிறியதாக இருந்ததை வரலாற்றுப் பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
ருத்ரதாமனின் ஜூனாகத் கல்வெட்டு, அசோகரின் ஆட்சியின் போது, ஒரு யோனராஜா (அதாவது; அயோனியன், அல்லது கிரேக்க மன்னன்), துஷாஸ்பா அபரந்தாவின் ஆளுநராக இருந்ததாகக் குறிப்பிடுகிறது. [1] மூன்றாம் பௌத்த மாநாட்டின் முடிவில் (கி.மு. 250), யோனா (கிரேக்க) தேரர் (துறவி) தம்மரக்கிதா, அசோக சக்கரவர்த்தியால் தருமத்தைப் போதிக்க இங்கு அனுப்பப்பட்டார் என பௌத்த நூலான மகாவம்சம் (xii.5) கூறுகிறது. [2] அவரது முயற்சியால் 37,000 பேர் பௌத்த மதத்தைத் தழுவினர் ( மகாவம்சம், xii.34-6). பௌத்த அறிஞரான ஏ.கே.வார்டரின் கூற்றுப்படி, தர்மகுப்தகா பிரிவு இங்குதான் தோன்றியது. [3]
அபரந்தா என்பது கொங்கணுக்கான சூர்பரக தேசத்திற்கான குடைச் சொல்லாகக் கருதப்படுகிறது. வடக்கில் கோமந்தகத்தையும், குண்டலிகா ஆற்றுடன் தெற்கில் உள்ள கோமந்தகத்தையும் இரண்டிற்கும் இடையே ஒரு பிளவுக் கோட்டாக இருந்துள்ளது.[4]