அபிசேக் தார் (Abhishek Dhar) என்பவர் புள்ளியியல் இயற்பியல் மற்றம் சுருக்க பருப்பொருள் இயற்பியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2009 ஆம் ஆண்டு இயற்பிய அறிவியல் பிரிவில் புள்ளியல் இயற்பியல் பிரிவில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது [1]. பெங்களுரில் உள்ள கோட்பாட்டு அறிவியல் அனைத்துலக மையத்தில் அபிசேக் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[2].