அபிநந்தநாதர் | |
---|---|
![]() அபிநந்தநாதர் | |
அதிபதி | 4வது தீர்த்தங்கரர் |
அபிநந்தநாதர் (Abhinandananatha), சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர்.[1] ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் மோட்சம் அடைந்தார்.
தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் யட்சினியாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.[2]
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.