அபின் சியாம் குப்தா

പ്രസിഡന്റ് എ.പി.ജെ. അബ്ദുൾ കലാം 2004 -ലെ അർജുന അവാർഡ് 2005 -ൽ ബാഡ്മിന്റണിനായി അഭിൻ ശ്യാം ഗുപ്തയ്ക്ക് സമ്മാനിക്കുന്നു

அபின் சியாம் குப்தா (Abhinn Shyam Gupta) (பிறப்பு: 2 அக்டோபர்1979, அலகாபாத்) இந்தியாவைச்  சார்ந்த பூப்பந்தாட்ட வீரர். ஒற்றையர் பிரிவில் முன்னாள் தேசிய வெற்றி வீரர். இவர், அலகாபாத்தில் வசிக்கிறார். 2004ல் கோடை ஒலிம்பிக்கில், பூப்பந்தாட்டத்தில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடினார். 32வது ஆட்டத்தில் கொரியாவின், பார்க் டே- சாங்கிடம் தோற்றார்.[1]

இந்திய பூப்பந்தாட்டத்தில் குப்தாவின் பங்களிப்புக்காக அர்சுனா விருது வழங்கப்பட்டது.[2]

கல்வி மற்றும் வேலை

[தொகு]

அபின், அலகாபாத் பல்கலைகழகத்தில் பி.காம் பட்டத்தைப் பெற்றார். தற்போது, அலகாபாத், சுபேதார் முனையத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தில்,  துனை மேலாளராக பணியாற்றுகின்றார்.

சாதனைகள்

[தொகு]

அபின் 2004ல் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றார்.  சிறு, துணை இளைய, இளைய(இரு முறை) மற்றும் மூத்த(இரு முறை) ஆகிய வகை விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ஒரே பூப்பந்தாட்ட வீரர் ஆவார்.

முக்கிய பங்கேற்பு

[தொகு]
  • பொது நலவாய விளையாட்டுக்கள், குலாலம்பூர் – 1998
  • உலக முதன்மை ஆட்டம்-கோப்பன்கேகன் – 1999
  • பிரஞ்சு சுப்பர் தொடர் 2001 - வெற்றியாளர்
  • சிவில்லி – 2001
  • மான்செச்டர் – 2002
  • ஆசிய விளையாட்டுப் போட்டி-பூசான் – 2002
  • பிர்மின்காம் – 2003
  • உலக ஒலிம்பிக்-ஏதேன் ஒலிம்பிக் – 2004
  • U.S.A. (உலக முதன்மைப் போட்டிக்குத் தேர்வு) – 2005

References

[தொகு]
  1. "Abhinn Shyam Gupta". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்
  2. List of Arjuna Awardees