அபீசு அகமது கான் | |
---|---|
பிறப்பு | உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 2006 |
பணி | இந்துஸ்தானி இசைக்கலைஞர் |
அறியப்படுவது | இராம்பூர்-சகாசுவான் கரானா - இந்துஸ்தானி இசை |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது |
அபீசு அகமது கான் (Hafeez Ahmed Khan) (இறப்பு 2006) இந்திய பாரம்பரிய இசையான இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஆவார். [1] இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில் பிரபலமான ஒரு இசைப் பள்ளியான இராம்பூர்-சகாசுவான் கரானாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். [2] குருகுல முறையில் இசையைக் கற்றார். மேலும், தனது கல்விப் படிப்பை வழக்கமான வழியில் தொடர்ந்தார். அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மின்னசொட்டா பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். [1] அனைத்திந்திய வானொலியின் துணை இயக்குநராகவும், இசைக்காக அறியப்பட்ட பல்கலைக்கழகமான இந்திரா கலா சங்கீத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார். [1] [2] இராசேந்திர பிரசன்னா, ரோமா ராணி பட்டாச்சார்யா, சகுந்தலா நரசிம்மன் மற்றும் சுபேந்து கோசு [3] போன்ற பல சீடர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். தான்சேனின் வாழ்க்கையைப் பற்றிய தி ரெயின் மேக்கர் என்ற திரைப்படத்திலும் நடித்தார். [1] 1996 சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார். [4] இந்திய அரசு 1991 இல் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது [5] புகழ்பெற்ற பாடகர் நிஸ்சார் உசைன் கானின் மகளை திருமணம் செய்தார். [6] 2006 இல் இறந்தார். [2]