அபீஸ் அகமது Hafiz Ahmed | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 7, 1962 கப்போகா, பார்பேட்டா மாவட்டம், அசாம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவஹாத்தி பல்கலைக்கழகம் |
பணி | ஆசிரியர், கவிஞர், நூலாசிரியர், பத்தி எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் |
அமைப்பு(கள்) | சார் சப்போரி இலக்கியப் பேரவை |
அறியப்படுவது | மியா கவிதை, அசாமிய மொழியைப் பரப்புதல் |
வாழ்க்கைத் துணை | ரசீதா அகமது |
அபீஸ் அகமது (Hafiz Ahmed; அசாமிய மொழி: হাফিজ আহমেদ) ஓர் இந்திய ஆசிரியரும், கவிஞரும், மியா வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஆர்வலருமாவார். [1] [2]
அகமது செப்டம்பர் 7, 1962 ஆம் ஆண்டு பார்பேட்டாவில் உள்ள கபோகாவில் பிறந்தார். இவர் ஒரு பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் மது மியா, தாயின் பெயர் சோம்ஜன் நெசா என்பதாகும். இவர் குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் அசாமிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். [3]
2016 ஆம் ஆண்டில், இவர் எழுதிய மியா கவிதை என்று அழைக்கப்படும் ஒரு அசாமிய கவிதை வகைக்கு முன்னோடியாக இருந்தார். [1] [4] [5] இவர் அசாமில் உள்ள சார் சாப்போரி இலக்கிய அமைப்பின் தலைவராக உள்ளார்.