அபுல் ஹசன் அலி ஹஸனி நத்வி

அபுல் ஹஸன் அலி ஹஸனி நத்வி
Abul Hasan Ali Hasani Nadwi
பிறப்புஅபுல் ஹஸன் அலி ஹஸனி நத்வி
(1914-11-24)நவம்பர் 24, 1914
உத்திரப் பிரதேசம், இந்தியா
இறப்புதிசம்பர் 31, 1999(1999-12-31) (அகவை 85)
ராய்பெரேலி, இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்

அபுல் ஹஸன் அலி ஹஸனி நத்வி (24 நவம்பர் 1914 - 31 டிசம்பர் 1999) (பிரியமாக அலி மியான்) என்பவர் ஒரு இந்திய இஸ்லாமிய அறிஞரும், பல்வேறு மொழிகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய ஓர் எழுத்தாளரும் ஆவார்.[1][2] இவர் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒரு தத்துவவாதியாவார்.[சான்று தேவை]

கல்வி

[தொகு]

இவர் நவம்பர், 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின், உத்திரப் பிரதேசம் மாநிலம், ராய்பெரேலியிலுள்ள தகியாவில் உள்ள தனது வீட்டில் ஆரம்பகால கல்வி பயின்றார். இவரது தாயார் தனது ஆரம்ப பயிற்சியை குர்ஆனிய ஆய்வுகளில் ஆரம்பித்தார். பின்னர் அவர் அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் முறையாக கல்வி கற்க ஆரம்பித்தார்.

அவரது தந்தை ஹக்கீம் சய்யத் அப்துல் ஹை, நுஸ்ஹதுல் கவாதிர்(5000க்கும் மேற்பட்ட இறையிலாளர்கள் மற்றும் துணை கண்டத்தின் நீதிபதிகள் ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகள்) என்னும் அரபு கலைக்களஞ்சியத்தை எட்டு பாகங்களாக எழுதினார்.

நத்வி லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா-வில் தனது மேற்படிப்பை படித்தார்.

எழுத்துக்கள்

[தொகு]

அபுல் ஹாசன் அலி நத்வி முதன்மையாக அரபு மொழியிலும், உருது மொழியிலும் எழுதினார். மேலும் வரலாறு, இறையியல் மற்றும் வாழ்க்கை வரலாறு, மற்றும் ஆயிரக்கணக்கில் கருத்தரங்குகள், கட்டுரைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உரைகள் மற்றும் ஐம்பது புத்தகங்களை எழுதினார்.

1950 இல் அவருடைய புத்தகம் 'மா தா ஹசிரல் ஆலம் பி இன்ஹிதாதில் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்ததென்ன) என்கிற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதகள் மற்றும் மரியாதைகள்

[தொகு]
  • 1962ல் ஆரம்பிக்கப்பட்ட உலக முஸ்லிம் லீகிற்கு முதல் அமர்வு செயலாளராக இருந்துள்ளார்.
  • 1980ல் மன்னர் பைசல் விருது
  • 1980ல் ஆக்ஸ்போர்ட் இஸ்லாமிய மையத்தின் தலைவர்.
  • 1984ல் இஸ்லாமிய இலக்கிய சங்கத்தின் தலைவர்.
  • 1999ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேய்க் முஹம்மது அவர்களால் நிறுவப்பட்ட 'இஸ்லாமிய ஆளுமை'க்கான விருது வழங்கப்பட்டது

காபாவை அணுகுதல்

[தொகு]

1951ஆம் ஆண்டு,தன்னுடைய இரண்டாவது ஹஜ்ஜின் போது,அவருக்காக காபா(இஸ்லாமிய புனிதஸ்தலத்தில் அமைந்துள்ள கட்டிடம்)வின் கதவுகள் இரண்டு நாட்கள் திறந்திருந்தது.மேலும் அபுல் ஹஸன் அலி நத்வி விரும்மும் நபரை உள் அழைத்துச் செல்ல அனுமதி இருந்தது.அவர் தனது புனிதையாத்திரையின் போது எப்போது வேண்டும்மானாலும் காபாவிற்குள்ளே நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

மரணம்

[தொகு]

இவர் திசம்பர் 31, 1999 ஆம் ஆண்டு இந்தியாவில், ராய்பெரேலியில் தன்னுடைய 85ஆவது வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 25 சனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்பிரவரி 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Biography" (PDF).