அபூர்வ சகோதரர்கள் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ஆச்சார்யா |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி |
கதை | கதை அலெக்சாண்டர் டூமா |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் எம். டி. பார்த்தசாரதி ஆர். வைத்தியநாதன் |
நடிப்பு | எம். கே. ராதா ஆர். நாகேந்திர ராவ் ஜி. பட்டு ஐயர் சோமு டி. பாலசுப்பிரமணியம் பி. பானுமதி லட்சுமிப்பிரபா சூர்யபிரபா |
வெளியீடு | அக்டோபர் 21, 1949 |
நீளம் | 13661 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அபூர்வ சகோதரர்கள் (Apoorva Sagodharargal) என்பது 1949 ஆம் ஆண்டு ஆச்சார்யா இயக்கிய இந்தியத் தமிழ்த் அதிரடித் திரைப்படமாகும். அலெக்சாண்டர் டூமாவின் 1844 ஆம் ஆண்டுய புதினமான தி கோர்சிகன் பிரதர்ஸ் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, பி. பானுமதி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். மேலும் ஆர். நாகேந்திர ராவ், சூரியப்பிரபா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். தங்களது பெற்றோரைக் கொன்று குழந்தைப் பருவத்தில் தங்களைப் பிரித்த கொடூரமான உறவினரை பழிவாங்கத் துடிக்கும் இரட்டையர்களை சுற்றி இக்கதை வருகிறது. அந்த இரண்டு சகோதரர்களும் தங்கள் பெற்றோரின் மரணத்திற்கு பழிவாங்குவதில் எவ்வாறு இணைகிறார்கள் என்பதைக் கதை காட்டுகிறது.
ஜெமினி ஸ்டுடியோஸ் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் அபூர்வ சகோரர்கள் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. தெலுங்கு பதிப்பான அபூர்வ சகோதருலு சி. புல்லையாவால் இயக்கப்பட்டது, மேலும் இந்தி பதிப்பான நிஷான் எஸ். எஸ். வாசனால் இயக்கப்பட்டது.
படத்தின் தொடக்கத்தில் வரவுவைக்கபட்ட மற்றும் பாடல் புத்தகத்தில் உள்ள படி நடிகர்கள்:[1]
|
|
அபூர்வா சகோதரர்கள் அலெக்சாண்டர் டூமாவின் தி கோர்சிகன் பிரதர்ஸ் நாவலைத் தழுவி கிரிகோரி ரடோஃப் படம் எடுக்கபட்டது.[2] இப்படம் வெற்றி பெற்றது. இதைத் தழுவி தமிழில் படம் எடுக்க வாசன் ஆர்வம் கொண்டார். தூ. கோ. ராகவாச்சாரி என்ற ஆச்சார்யா வழக்கறிஞராக இருந்து திரைப்பட படைப்பாளியாக ஆனவர். அவர் படத்தை இயக்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பானுமதி கதாநாயகியாக நடிக்க, எம். கே. ராதா நாயகனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] எதிர்மறை கதாபாத்திரத்திற்காக, வாசன் பி. யு. சின்னப்பாவை அணுகினார், அவர் அதற்கு மறுத்துவிட்டார். எனவே கன்னட நடிகர் நாகேந்திர ராவ் அந்தப் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.[2] சண்டைப் பயிற்சியாளரான "ஸ்டண்ட்" சோமு, பூபதியின் நெருங்கிய கூட்டாளியான மருது வேடத்தில் நடித்தார்.[3] இந்த படம் சந்திரலேகாவின்வின் அதிகாரப்பூர்வமற்ற தொடர்ச்சியாக அடிக்கடி கருதப்பட்டது.[4]
இப்படத்திற்கு இராஜேஸ்வர ராவ், எம். டி. பார்த்தசாரதி, ஆர். வைத்தியநாதன் ஆகியோர் இசையமைத்தனர். பாடல் வரிகளை கொத்தமங்கலம் சுப்பு மற்றும் வி. சீதாராமன் ஆகியோர் எழுதினர். பானுமதி பாடிய "லட்டு லட்டு" பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.[3][2] இந்தி பதிப்பிற்கான ஒரு டூயட் ராஜேஸ்வர ராவால் பியானோவில் இசையமைக்கப்பட்டது. வாசன் அதை மிகவும் விரும்பினார், தமிழ் பதிப்பிற்கும் அதைக் கொண்டுவர விரும்பினார். படப்பிடிப்பு முடிந்ததும் இந்தப் பாடல் தமிழில் சேர்க்கப்பட்டது.[2] மலையாளப் பதிப்பிற்கான பாடல்களை பி. பாஸ்கரன் எழுதினார்.
எண். | பாடல் | பாடகர்/கள் | வரிகள் | நீளம்(நி:நொ) |
---|---|---|---|---|
1 | "எங்க ராசா வந்தான்" | குழுவினர் | கொத்தமங்கலம் சுப்பு | 00:32 |
2 | "தாலேலோ ராஜகுமாரர்களே" | குழுவினர் | 03:09 | |
3 | "மாய விந்தையேதானே" | டி. ஏ. மோதி, பி. லீலா | 3:54 | |
4 | "மானும் மயிலும் ஆடும் சோலை" | பி. பானுமதி | 2:55 | |
5 | "லட்டு லட்டு மிட்டாய் வேணுமா" | பி. பானுமதி | 06:02 | |
8 | "மனமோகனமே வனவாசமே" | பி. பானுமதி | 02:31 | |
9 | "ஆஹா ஆடுவேனே கீதம் படுவேனே" | பி. பானுமதி, டி. ஏ. மோதி | 03:30 | |
10 | "பரதேசமே போகாதே" | டி. ஏ. மோதி | 05:39 |
அபூர்வ சகோதரர்கள் 21 அக்டோபர் 1949 அன்று வெளியானது.[5] இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.[2] எம். கே. ராதாவின் நடிப்பு "அவரது திரை வாழ்வில் மிகச்சிறந்தது" என்று பாராட்டிய தனஞ்செயன், "எல்லோரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வரவழைத்து, பொழுதுபோக்கு மற்றும் ஈர்க்கக்கூடிய திரைப்படத்தை வழங்கியதற்காக" இயக்குனர் ஆச்சார்யாவைப் பாராட்டினார்.[6] "பானுமதி மற்றும் நாகேந்திர ராவ் ஆகியோரின் சிறந்த நடிப்பிற்காகவும், இசைக்காகவும் இப்படம் நினைவுகூரப்படுகிறது" என்று தி இந்துவின் ராண்டார் கை எழுதினார்.[2] இப்படம் தெலுங்கில் அபூர்வா சகோதருலு என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது, ராதா கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார். இதை இந்தியில் ரஞ்சனை நாயகனாக நடிக்க வைத்து நிஷான் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. மூன்று பதிப்புகளுக்கும் பானுமதிதான் நாயகி.[6]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)