அபூர்வா அசுரனி (Apurva Asrani பிறப்பு 21 மார்ச் 1978) தேசிய விருது, பிலிம்பேர் விருது & திரை விருது பெற்ற இந்தியா, கோவாவினைப் பூர்வீகமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 2016இல் அலிகார் எனும் மனித உரிமைகள் பற்றிய நாடகத்தினையும், கிரிமினல் ஜசுடிசுபிகைண்டு குளோசுடு டோர்சு எனும் நீதிமன்ற நாடத்தினையும் எழுதியுள்ளார். 2013ஆம் ஆண்டில் வெளியான ஷாகித் திரைப்படத்தில் இணை எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பரவலாக அறியப்பட்ட 1998இல் வெளியான சத்யா திரைப்படத்திலும் 2019ஆம் ஆண்டில் வெளியான மேட் இன் ஹெவன் எனும் வலைத் தொடரிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் சோனி மியூசிக் இந்தியாவுக்கான தேரா மேரா பியார் (2005) இசை வீடியோக்களின் இயக்குநராகவும் உள்ளார்.
இந்தியாவில் நங்கை, நம்பி, ஈரர், திருனர்களுக்கான சம உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் அபூர்வா முக்கிய பங்காற்றி வருகிறார்..
பிரபல பாலிவுட் கவுண்டவுன் நிகழ்ச்சியான பிபிஎல் ஓயின் உதவியாளராக அபூர்வா 1995 இல் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.19 வயதில் இவர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா திரைப்படத்தின் தொகுப்பாளரானார் . இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த தொகுப்பாளாருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.இதன்மூலம் இந்த விருதினைப் மிகக் குறைந்த வயதில் பெற்ற இளைஞர் எனும் சாதனை படைத்தார் . பின்னர் அவர் சன்ஹில் சிப்பியின் இருமொழிகளில் வெளியான ஸ்னிப் எனும் திரைபப்டத்திற்கு தொகுப்பாளராக பணியாற்றினார்.
அபூர்வாவின் மற்ற பணிகளில் குறிப்பிடத்தகுந்தது ஹன்சல் மேத்தாவின் சல் திரைப்படம் ஆகும். விமர்சகர் சுபாஷ் கே ஜா தனது விமர்சனத்தில் இந்தத் திரைப்படத்தின் உண்மையான நாயகன் படத்தின் தொகுப்பாளர் தான் எனக் குறிப்பிடிருந்தார். அனுபம் கெர் முதன்முதலாக இயக்கிய ஓம் ஜெய் ஜெகதீஸ் எனும் திரைப்படத்திலும் நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த தஸ்வீர் 8x10 திரைப்படத்தில் மேற்பார்வை தொகுப்பாளராகப் பணியாற்றினார். ஜான் ஆபிரகாம் (நடிகர்) நடித்த ஆஷாயின் திரைப்படத்திலும் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[1]
2005 ஆம் ஆண்டில், சோனி மியூசிக் இந்தியாவின் ஒலித் தொகுதியான தேரா மேரா பியரின் இசை நிகழ்படங்களை அபூர்வா இயக்கினார் .அதில் நடிகை நிம்ரத் கவுரை அறிமுகப்படுத்தினார். அதன் தலைப்புப் பாடலான, "தேரா மேரா பியார்", என்பதனை குமார் சானு பாடினார். "யே கியா ஹுவா" பாடல் ஸ்ரேயா கோசலால் பாடப்பட்டது. இந்தப் பாடல் இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர்களுடன் செர்ந்து இசையமைக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் நடந்த சஹாரா இசை விருதுகளில் டெரா மேரா பியார் ஆண்டின் சிறந்த பாடல் தொகுதியாகத் தேர்வானது.
1999 இல் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகளில் சத்யா திரைப்படத்திற்காக அபூர்வா சிறந்த படத்தொகுப்புக்கான பிலிம்பேர் விருதை பனோதயாவுடன் பகிர்ந்து கொண்டார் [2][3]
2001 ஆம் ஆண்டில், சன்ஹில் சிப்பி இயக்கி இருமொழிகளில் வெளியான ஸ்னிப் எனும் நகைச்சுவைத் திரைப்படத்திற்காக சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதை வென்றார்.
2001 ஆம் ஆண்டில் ஹன்சல் மேத்தாவின் சால் (திரைப்படம்) படத் தொகுப்பிற்காக அவர் ஜீ சினி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2013 இல் அபூர்வா ஷாஹித் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான லைஃப் ஓகே ஸ்கிரீன் விருதினை இயக்குனர் அன்சல் மேத்தாவுடன் பகிர்ந்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டில், ராபிட்லியன் விருதுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா சர்வதேச திரைப்பட விழாவில் அலிகார் படத்திற்காக 'சிறந்த தொகுப்பாளார் ' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' விருதிற்காக அபூர்வா பரிந்துரைக்கப்பட்டார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)