அப் லெய் சாவ் பாலம் (Ap Lei Chau Bridge) என்பது ஹொங்கொங்கில் ஒரு அதிவிரைவுப் பாதையில் உள்ள பாலமாகும். இப்பாலம் ஹொங்கொங் தீவில் எபடீன் நகரத்திற்கும் அப் லெய் சாவ் தீவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் பாலமாகும்.
இந்த பாலம் இரண்டு பாதைக்கோடுகளுடன் கட்டப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பாதைக்கோடுகளை கொண்டு நான்கு பாதைக்கோடுகளாக விரிவாக்கம் பெற்றது.