அப்சல் குஞ்ச்

அப்சல் குஞ்ச்
அண்மைப்பகுதி
அப்சல் குஞ்ச் is located in தெலங்காணா
அப்சல் குஞ்ச்
அப்சல் குஞ்ச்
தெலங்காணாவில் அப்சல் குஞ்ச்சின் அமைவிடம்
அப்சல் குஞ்ச் is located in இந்தியா
அப்சல் குஞ்ச்
அப்சல் குஞ்ச்
அப்சல் குஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°22′24″N 78°28′15″E / 17.373247°N 78.470932°E / 17.373247; 78.470932
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
பெயர்ச்சூட்டுஐந்தாம் நிசாம் அப்சல்-அத்-தௌலா
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500 012
வாகனப் பதிவுடிஎஸ்
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகோஷாமகால்
திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம்
இணையதளம்telangana.gov.in

அப்சல் குஞ்ச் (Afzal Gunj) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின், ஐதராபாத்தின் முசி ஆற்றுக்கு அருகிலுள்ள பழைய நகரத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் இருப்பதால் உள்ளூர் போக்குவரத்தின் மையமாக இது திகழ்கிறது. பேருந்து நிலையம் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சேவைகளை வழங்குகிறது. [1]

புகழ்பெற்ற உஸ்மானியா பொது மருத்துவமனை, மாநில மத்திய நூலகம் , தெலங்காணா உயர் நீதிமன்றம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. சார்மினார் மற்றும் அருகிலுள்ள நினைவுச்சின்னங்களான, புராணி அவேலி, சலார் ஜங் அருங்காட்சியகம் போன்ற பிற அடையாளங்களும் அருகிலேயே அமைந்துள்ளன.

வரலாறு

[தொகு]

ஐந்தாவது நிசாம், அப்சல் அத்-தௌலா, தானிய மற்றும் வணிகர்களுக்காக இந்த நிலத்தை பரிசளித்தார். இந்த இடத்திற்கு அவரது பெயரிடப்பட்டது. மோஸ்ஸாம் ஜாஹி சந்தை, சித்தி அம்பர் பஜார், உஸ்மங்குஞ்ச் சந்தை, பேகம் பஜார், மற்றும் பூல் பாக் போன்ற சந்தைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Afzal Gunj formerly grain merchants’ hub; now a city hot spot
  2. "Archived copy". Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Afzalgunj
என்பதில் ஊடகங்கள் உள்ளன.