அ. குரூயிசு(υ Gruis) ( இலத்தீன் மொழியில் அப்சிலோன் குரூயிசு) என்பது குரூயிசின் தெற்கு விண்மீன் குழுவில் உள்ள இரட்டை விண்மீனாகும் . இதன் தோற்றப் பொலிவுப் பருமை 5.61 ஆகும், இது வெற்றுக் கண்ணால் பார்க்கும் அளவுக்கு பொலிவாக உள்ளது. இது சுமார் 280 ஒளியாண்டுகள்(87 புடைநொடிகள்) தொலைவில், வெள்ளை நிறமுள்ள முதன்மை A1V கதிர்நிரல் உள்ள A-வகை முதன்மை-வரிசை விண்மீனாகும், இது தற்போது அதன் அகட்டில் உள்ள நீரக அணுக்கருத் தொகுப்பை நிகழ்த்துகிறது. இது 320 கிமீ/நொ சுழற்சி வேகத்துடன் வேகமாகச் சுழல்கிறது. இதன் துணை 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, 205° இருப்புக் கோணத்தில் முதன்மையிலிருந்து 0.90 ″ கோணப் பிரிவின் அளவு சாய்ந்த தலத்தில் 8.24 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள விண்மீனாகும்.[10]
↑Houk, Nancy (1979), Catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 3, Ann Arbor, Michigan: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1982mcts.book.....H.
↑Nicolet, B. (1978), "Photoelectric photometric Catalogue of homogeneous measurements in the UBV System", Astronomy and Astrophysics Supplement Series, 34: 1–49, Bibcode:1978A&AS...34....1N.
↑Wilson, R. E. (1953), "General Catalogue of Stellar Radial Velocities", Carnegie Institute Washington D.C. Publication, Carnegie Institute of Washington, D.C., Bibcode:1953GCRV..C......0W.