அப்துல் காதர் சாகுல் அமீட் (பொதுவாக ஏ. சி. எஸ். ஹமீட், Abdul Cader Shahul Hameed, ஏப்ரல் 10, 1927 - செப்டம்பர் 3, 1999) இலங்கையின் அரசியல்வாதியும், முனாள் அமைச்சரும் ஆவார்.[1]
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அக்குரணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமீட் ஒரு இசுலாமியராவார்.
கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்ற சாகுல் அமீது மாத்தளை வின்ட்சர் கல்லூரியில் ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த போதிலும் 1960களின் ஆரம்பத்தில் அரசியலில் நுழைந்தார். சிறந்த எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் பிற்காலத்தில் திகழ்ந்தார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் சரளமாகப் பேசுவதில் வல்லவர். 17 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் பல பங்களிப்புகளை செய்துள்ளார்.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கைப் பொதுத்தேர்தலை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சியில் முக்கிய உறுப்பினராக செயற்பட்டார். 1978 முதல் 1989 ஆண்டு வரை இலங்கை வெளிநாட்டமைச்சராகவும் 1989 முதல் 1993 வரை கல்வி அமைச்சராகவும் செயலாற்றினார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுடனாக பேச்சுக்களின் போது அரச தரப்பிற்கு தலைமைத் தாங்கினார்.
இவர் 1999 செப்டம்பர் 3 ஆம் நாள் கொழும்பில் காலமானார்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)