அப்துல் பாரி சித்திக் Abdul Bari Siddiqui | |
---|---|
முதன்மைச் செயலர் இராச்டிரிய ஜனதா தளம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
குடியரசுத் தலைவர் | லாலு பிரசாத் யாதவ் |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) (MLA) of பீகாரின் சட்டமன்றம் | |
பதவியில் 2010–2020 | |
முன்னையவர் | புதியது |
பின்னவர் | மிசிரி லால் யாதவ் |
தொகுதி | அலிநகர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1995–2010 | |
முன்னையவர் | மகேந்திர ஜா ஆசாத் |
பின்னவர் | நீக்கப்பட்ட தொகுதி |
தொகுதி | பாகேரா |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | புதியது |
பின்னவர் | பரமானந் ஜா |
தொகுதி | பாகேரா |
அமைச்சர்-பீகார் அரசு | |
பதவியில் 1995–2005 | |
நிதியமைச்சர், பீகார் அரசு | |
பதவியில் 20 நவம்பர் 2015 – 27 சூலை 2017 | |
பின்னவர் | சுசில் குமார் மோடி |
எதிர்க்கட்சித் தலைவர் பீகாரின் சட்டமன்றம் | |
பதவியில் திசம்பர் 2010 – சூன் 2013 | |
முன்னையவர் | ராப்ரி தேவி |
பின்னவர் | நந்த கிசோர் யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 திசம்பர் 1953 தர்பங்கா மாவட்டம், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வாழிடம் | உருப்சுபுர், அலிநகர், தர்பங்கா |
அப்துல் பாரி சித்திக் (Abdul Bari Siddiqui) என்பவர் பீகாரின் நிதி அமைச்சராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் பீகார் மாநிலம் தர்பங்கா, அலிநகரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2] சித்திக் இராச்டிரிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தர்பங்கா, அலிநகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவர் தர்பங்காவில் போட்டியிட்டு 2,67,979 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கோபால் ஜீ தாக்குரிடம் தோல்வியடைந்தார்.
முன்னதாக, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே பிளவு, ஏற்பட்டு உத்தியோக பூர்வ எதிர்க்கட்சியாக மாறும் வரை சித்திக் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[4][5]
2015ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகார் துடுப்பாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் வினோத் குமாரைத் தோற்கடித்து அதன் தலைவராக சித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ல், மதுபானி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் மீண்டும் 2014-ல் மதுபானி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மூத்த தலைவர் உக்கும்தேவ் நாராயண் யாதவிடம் தோல்வியுற்றார். இவர் 7வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னதாக பகோரா தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அலிநகரில் போட்டியிட்டார்.
ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அப்துல் பாரி சித்திக் 1977-ல் பகோராவிலிருந்து காங்கிரசின் அரிநாத் மிசுராவை தோற்கடித்தார். இது இவரின் முதல் சட்டமன்ற வெற்றி ஆகும்.[6] இதன் பின்னர் பீகார் சட்டப் பேரவை உறுப்பினராக 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது மகன், அனிசு பாரி தற்போது ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் எம்.சி/எம்.பி.ஏ. 2023 உறுப்பினராக உள்ளார், தில்லியில் எட்-டெக் ஆரம்ப தொழில் முனைவராக-நிறுவனத்தை நடத்தும் எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.[7][8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)