அமடிக்னாக்கு தீவு [1] (Amatignak Island) அமெரிக்காவிலுள்ள அலாசுகாவின் அலுடியன் தீவுக்கூட்டத்தில் உள்ள டெலாரோஃப் தீவுகளின் (மேற்கு ஆண்ட்ரியானோஃப் தீவுக் கூட்டம் ) உறுப்பினர் தீவு ஆகும். . அலாசுகாவின் தெற்கு கோடி முனையும் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் மேற்கு கோடி தீர்க்கரேகையும் இத்தீவில் உள்ளன. டெலாரோஃப் மற்றும் மேற்கு ஆண்ட்ரியானோஃப் தீவுகளின் அடுக்கு பாறைகளின் ஐந்து அலகுகளில் அமடிக்னாக்கு தீவின் பாறைகளும் ஓர் அலகாகும்
அமடிக்னாக்கு தீவு வடக்கிலிருந்து தெற்காக சுமார் 5 மைல்கள் (8.0 km) நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 3 மைல்கள் (4.8 km) அகலமும் கொண்டுள்ளது. அமடிக்னாக்கு தீவில் மக்கள் வசிக்கவில்லை.. அருகிலுள்ள தீவு உலக் தீவு ஆகும். இது சுமார் 4 மைல்கள் (6.4 km) வடகிழக்கில்.அமைந்துள்ளது.