அமந்தா பாவுவேர் Amanda Bauer | |
---|---|
பிறப்பு | மே 26, 1979[1] சிஞ்சினாட்டி, ஓகியோ, ஐக்கிய அமெரிக்கா |
வாழிடம் | தக்சோன், அரிசோனா |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆத்திரேலிய வான்கானகம். பெரிய அளக்கை தொலைநோக்கி |
கல்வி கற்ற இடங்கள் | சிஞ்சினாட்டி பல்கலைக்கழகம், ஆசுட்டின் டெக்சாசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மக்கள் கல்வி, பரப்புரை தலைவர் |
விருதுகள் | ARC மீயறிவியல் ஆய்வுநல்கை |
அமந்தா எலைன் பாவுவேர் (Amanda Elaine Bauer) (பிறப்பு: 26 மே 1979) ஓர் அமெரிக்கத் தொழில்முறை வானியலாளர் அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் இப்போது அரிசோனாவில் உள்ள டசுக்கன் பெரிய அளக்கைத் தொலைநோக்கியில் கல்வி, மக்கள் பரப்புரைத் தலைவராக உள்ளார். இவர் 2013 முதல் 2016 வரை ஆத்திரேலிய வான்காணகத்தில் ஆராய்ச்சி வானியலாளராக உள்ளார். இவரது முதன்மையான ஆய்வுப் புலம் பால்வெளி உருவாக்கமும் அது புது விண்மீன்கள் தோற்றுவித்தலும் ஆகும். தொடக்கப் பால்வெளி புது விண்மீன்களின் உருவாக்கத்தை உடனே நிறுத்திவிடுதலைப் பற்றியும் தன் ஆய்வில் கவனம் செலுத்துகிறார். இவர் பொதுமக்களால் இவரது கல்விக்காகவும் பரப்புரைக்காகவும் அறியப்பட்டவர்.
இவர் அமெரிக்காவில் ஓகியோ மாநிலத்தில் சிஞ்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார். இளமையில் இருந்தே இவர் வானியலில் ஆர்வம் பூண்ட்ருந்தார். இவர் பள்ளிக் கணிதவியல் குழுவில் இருந்தார். ஆனால் அப்பொது இதுவே தன் வாழ்க்கையாக மலரும் என எதிர்பார்க்கவில்லை. சிஞ்சினாட்டி பல்கலைக்கழக்க் கல்லூரியில் இவர் முதலில் பிரெஞ்சு படித்தாலும், விரைவில் அறிவியலுக்கு மாறியுள்ளார். இவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாததாலும் அங்கே வானியல் துறை இல்லாததாலும் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ளார்.
இசைமாந்தல், பாடிவாழ்க்கை, குதித்தல், நீச்சல் ஆகியவை இவருக்கு மிகவும் பிடிதவை. இவர் இசைவிழாக்களுக்குச் செல்லுதல், அங்கே நண்பரோடு அளவளாவுதல், இசைகேட்டு மகிழ்தல், தீக்காய்தல் விண்மீன்களின் கீழே படுத்துறங்கல் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை என அவரே கூறுகிறார்.[2][3]
இவர் 2016 பிப்ரவரியில் இதா உலூனா எனும் பெண்மகவைப் பெற்றெடுத்தார்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)