அமரசிம்மன்

அமரகோசம் நூலின் அட்டைப்படம்

அமரசிம்மன் (Amara Simha) (கி.பி. 375) கி.பி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த பௌத்த அறிஞரும், அமரகோசம் எனும் சமசுகிருத மொழியின் இலக்கண ஆசிரியர் மற்றும் கவிஞரும் ஆவார்.

குப்தப் பேரரசர்களில் புகழ்பெற்ற இரண்டாம் சந்திர குப்தரின் அரசவையின் நவரத்தினங்கள் எனப்போற்றப்பட்ட ஒன்பது அறிஞர்களில் ஒருவராவர். [1][2]

அமரசிம்மனின் படைப்புகளில் மிகவும் புகழ்பெற்றது அவரது சமசுகிருத மொழி இலக்கண நூலான அமரகோசம் ஆகும்.[3]

அமரகோசம் எனும் இலக்கண நூல் மூன்று தொகுப்புகளாக உள்ளது.[1] [4] இதில் 10,000 சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமரசிம்மனின் அமரகோசம் எனும் சமசுகிருத இலக்கண நூல், 1798 முதல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. [1] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Chisholm 1911.
  2. Amarakosha compiled by B. L. Rice, edited by N. Balasubramanya, 1970, page X
  3. Mirashi, Vasudev Vishnu (1975). Literary and Historical Studies in Indology (in ஆங்கிலம்). Motilal Banarsidass. pp. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804173.
  4. Mukherjee, Sujit (1998). A Dictionary of Indian Literature: Beginnings-1850 (in ஆங்கிலம்). Orient Blackswan. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125014539. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  5. Rice, Benjamin Lewis (1927). Amarakōśa vemba nāmaliṅgānuśāsanavu, Iṅglish Kannaḍa artha mattu padagaḷa paṭṭi sahita. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120602601.

வெளி இணைப்புகள்

[தொகு]

Attribution: