![]() | |
செய்பொருள் | சுண்ணாம்புக் கல் |
---|---|
உருவாக்கம் | கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 8ம் நூற்றாண்டு முடிய |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
அமராவதி பலகைச் சிற்பங்கள் (Amaravati Collection), என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள் அமராவதி தொல்லியல் களத்தில் கிபி 1797 மற்றும் 1845ல் அகழாய்வின் போது கிடைத்த 120 சுண்ணாம்புக் கல்லால் நிறுவப்பட்ட பௌத்த சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்களின் தொகுதியாகும். [2]இவைகள் கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டதாகும்.
இச்சுண்ணாம்புக்கல் பலகைச் சிற்பங்கள் 1858ல் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இச்சிற்பங்கள் 1880 முதல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. [3] [4]
இச்சுண்ணாம்புக் கற்பலகைகளில் புத்தரின் ஜாதக கதைகள் மற்றும், தூபிகள், சைத்தியங்கள் புத்தரின் வாழ்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் வடிக்கப்பட்டுள்ளது. [5]
இப்பௌத்த சுண்ணாம்புக்கல் பலகைச் சிற்பங்கள் பிரதி எடுக்கப்பட்டும், புகைப்படங்கள் எடுத்தும் இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [6]