அமரு சதகம் (अमरुशतक) என்பது அமருவின் நூறு சரணங்கள் என்றும் அழைக்கப்படும் சமஸ்கிருதக் கவிதை நூலாகும். இக்கவிதைகள் அமருவால் எழுதப்பட்டது. இது சுமார் 7வது அல்லது 8வது நூற்றாண்டைச் சேர்ந்த கவிதைகளின் தொகுப்பாகும்.[1]
சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாற்றில் சிறந்த பாடல் வரிகளில் ஒன்றாக அமருசதகம் வகைபடுத்தப்பட்டுள்ளது, காளிதாசர் மற்றும் பரத்ரிஹரியின் ஶ்ரீங்கராசதகத்துடன் இது ஒப்பிடப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய விமர்சகர் ஆனந்தவர்தன தனது த்வண்யலோகத்தில் "கவிஞர் அமருவின் ஒற்றைச் சரணம் ... முழுத் தொகுதிகளிலும் காணப்படுவதற்கு சமமான அன்பின் சுவையை வழங்கக்கூடும்" என்றார். அமரு சதகத்தின் வசனங்கள் கவிஞர்கள் மற்றும் விமர்சகர்களால் மற்ற கவிதைகளை மதிப்பிடுவதற்கு எடுத்துக்காட்டுகளாகவும் தரங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்ட்ரூ ஷெல்லிங் இதை "உலகின் எந்த இடத்திலும் உருவாக்குவது போல் அசல் மற்றும் தெளிவான காதல் கவிதை" என்று விவரிக்கிறார்.[2]
இதன் கவிதைகள் சிற்றின்பம், காதல், பேரார்வம், பிரிதல், ஏக்கம், நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. கிரெக் பெய்லி குறிப்பிடுகையில், இது "கவர்ச்சி, துரோகம் போன்ற சமூக அம்சங்களைப் பற்றியது. இது சிற்றின்பத்தைப் பற்றியது என்பதால் பெண்பால் கோபம் மற்றும் ஆண்பால் சுய-பரிதாபம்" ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றார். இதேபோல் ஷெல்லிங், "காதலின் அனைத்து சுவைகளும் அல்லது நுணுக்கங்களும் இக்கவிதைப் புத்தகம் கொண்டுள்ளது என்றார். மேலும் நிறைவுற்றதன் இனிமையை விட பிரிவினை அல்லது காட்டிக்கொடுப்பின் கசப்பான சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.