அமிதா அல்-அட்டாஸ் | |
---|---|
பிறப்பு | அலியா கானெம்[1][2]:72 அல்லது ஆலியா கானெம்[3][4] 1934 (அகவை 90–91) |
வாழ்க்கைத் துணை | முகமது பின் அவத் பின்லேடன் முகமது அல்-அட்டாஸ் |
பிள்ளைகள் | உசாமா பின் லாதின் |
அமீதா அல்-அட்டாஸ் (Hamida al-Attas) 1934 ) என்பவர் உசாமா பின் லாதின் என்பவரின் தாயாவார். கிச்சிலி விவசாயம் செய்து வரும் ஒரு சிரியக் குடும்பத்தில் இருந்து வந்த இவர், இரண்டு சகோதரர்கள் மற்றும் மற்றொரு சகோதரியுடன், லடாகியா துறைமுகத்திற்கு வெளியே ஓம்ரானியா மற்றும் பாப்ரியன் ஆகிய இரண்டு சிறிய கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தார். சியா இசுலாமியர்களின் ஒரு பகுதியான அலவைட்டுகளின் குடும்பத்தில் வளர்ந்தார். தனது 22 வயதில், 1956 இல் முகமது பின் அவத் பின் லாதினை மணந்தார். பின்னர், தனது கணவருடன் சவூதி அரேபியா சென்றார். இவர் முகமது பின் அவத் பின் லாதினின் பதினொன்றாவது மனைவியாவார்.[5] இவரது கணவருக்கு மேலும் பல மனைவிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் விவாகரத்து செய்திருந்தனர். ஏனெனில் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் சட்டமாகும். பின் லாதினின் மனைவி என்பதைவிட இவர் ஒரு காதலி என்று அறியப்பட்டுள்ளது. .
முகமது பின்லேடன் மூலம் இவருக்கு உசாமா பின் லாதின், 1957 இல் பிறந்தார். பின்னர், இவர்கள் விவாகரத்து செய்தனர்; முகமதுவின் 24 மகன்களில் ஒருவராக (17 முதல் 22க்குள் உசாமா இருந்தார்.[6][7] லடாகியாவில் உள்ள தனது சகோதரர் நாஜியின் வீட்டில் இவர் அடிக்கடி கோடைகாலத்தை கழித்தார். உசாமா 17 வயது வரை இவருடன் இருந்தார்.[4] 1974 ஆம் ஆண்டில், உசாமாவுக்கு 18 வயதாக இருந்தபோது, தன்னுடைய மாமன் மகளான, 14 வயது நஜ்வா கானெம் என்பவரை மணந்தார். .
அமீதா பின்னர் பின்லாடன் குழுவில் ஹத்ராமி நிர்வாகியாக இருந்த முகமது அல்-அட்டாஸ் என்பவரை மணந்தார்.[8] :73 இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[1][2][2][9]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)