அமினுடின் அருண் Yang Berhormat YB Aminuddin Harun | |
---|---|
11-ஆவது நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2018 | |
ஆட்சியாளர் | துவாங்கு முகிரிஸ் |
முன்னையவர் | முகமது அசான் |
தொகுதி | நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் சிக்காமட் |
துணைத்தலைவர் மக்கள் நீதிக் கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஜூலை 2022 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் இப்ராகீம் |
மலேசிய நாடாளுமன்றம் போர்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 நவம்பர் 2022 | |
முன்னையவர் | அன்வர் இப்ராகீம் (பாக்காத்தான்–பி.கே.ஆர்) |
பெரும்பான்மை | 23,601 (2022) |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 மார்ச் 2008 | |
முன்னையவர் | யூசோப் அர்மைன் சா (பாரிசான்–அம்னோ) |
பெரும்பான்மை | 499 (2008) 510 (2013) 3,413 (2018) 2,662 (2023) |
மாநிலத் தலைவர் பாக்காத்தான் நெகிரி செம்பிலான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2017 | |
மலேசிய மக்களவை | |
2022 | பாக்காத்தான் |
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் | |
2008–2018 | மக்கள் நீதிக் கட்சி |
2018 | பாக்காத்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 சனவரி 1967 கம்போங் பச்சித்தான், போர்டிக்சன், நெகிரி செம்பிலான், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (UMNO) (1998) பி.கே.ஆர் (PKR) (1999) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் (BN) (1998) மாற்று பாரிசான் (BA) (1999–2004) பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) பாக்காத்தான் (PH) (2015) |
துணைவர் | வான் அஸ்னி வான் யூசோப் |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் மாணவர் | மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
புனைப்பெயர் | தோக் மின்[1] |
டத்தோ ஸ்ரீ உத்தாமா அமினுடின் அருண் (ஆங்கிலம்; மலாய்: Aminuddin bin Harun; சீனம்: 阿敏努丁·哈仑; சாவி: أمين الدين بن هارون ; (பிறப்பு: 2 சனவரி 1967) என்பவர்; 2018 மே மாதம் தொடங்கி மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 11-ஆவது நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பதவி வகிக்கின்றார்.
மார்ச் 2008 முதல் சிக்காமட் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும்; நவம்பர் 2022 முதல் போர்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியின் மலேசிய மக்களவை உறுப்பினராகவும் சேவை செய்து வருகிறார்.[2]
முன்பு பாக்காத்தான் ராக்யாட் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சி கட்சியின் துணைத் தலைவராக 2022 சூலை மாதத்தில் இருந்து சேவை செய்து வருகிறார்.[3]
அத்துடன் 2017 ஆகஸ்டு மாதத்தில் இருந்து நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். இதற்கு முன்னர் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான அம்னோவின் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
அமினுடின் 2 ஜனவரி 1967 அன்று நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் மாவட்டத்தில் உள்ள கம்போங் கம்போங் பச்சித்தானில் பிறந்தார். மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் படிப்பைத் தொடர்வதற்கு முன்பு, போர்ட்டிக்சன் நகரில் உள்ள தானா மேரா தேசிய இடைநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
பின்னர் 1991 முதல் 1995 வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றினார். 1995-இல், கோல்டன் ஹோப் நிறுவனத்தில் உற்பத்தி மேலாண்மைத் தலைவராகச் சேர்ந்தார்.
1999-இல் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில் சேருவதற்கு முன்பு, அமினுடின் அருண் அம்னோவின் உறுப்பினராகவும், அம்னோ கம்போங் பச்சித்தான் கிளையின் செயலாளராகவும் (1995-1998); மற்றும் ஜிம்மா மாநில சட்டமன்றத்தின் அம்னோ இளைஞர் செயலாளராகவும் (1997-1998) சேவை செய்தார்.[4]
2018 மலேசியப் பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் பாக்காத்தான் அரப்பான் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் 12 மே 2018 அன்று கோலா பிலாவில் உள்ள இசுதானா செரி மெனாந்தியில் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக பதவியேற்றார்.[5]
வான் அஸ்னி வான் யூசோப் என்பவரை மணந்த இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள்; மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளனர்.[3]
ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2008 | N36 சிக்காமட் | அமினுடின் அருண் (பி.கே.ஆர்) | 6,036 | 51.02% | யூசோப் அர்மாயின் சா (அம்னோ) | 5,537 | 46.80% | 11,830 | 499 | 76.37% | ||
2013 | அமினுடின் அருண் (பி.கே.ஆர்) | 8,584 | 50.63% | வான் சல்வதி அப்துல்லா (அம்னோ) | 8,074 | 47.62% | 16,954 | 510 | 86.30% | |||
2018 | அமினுடின் அருண் (பி.கே.ஆர்) | 9,832 | 47.30% | சியாம்சுல் அம்ரி இசுமாயில் (அம்னோ) | 6,419 | 30.90% | 17,858 | 3,413 | 85.90% | |||
ரகீம் யூசுப் (பாஸ்) | 1,331 | 6.40% | ||||||||||
பூஜாங் அபு (சுயேச்சை) | 15 | 0.10% | ||||||||||
2023 | அமினுடின் அருண் (பி.கே.ஆர்) | 12,730 | 54.82% | அகமத் ரைகான் முகமது இலால் (பெர்சத்து) | 10,068 | 43.36% | 23,220 | 2,662 | 71.79% | |||
முகமது அபீசு பகாருதீன் (சுயேச்சை) | 339 | 1.46% | ||||||||||
பூஜாங் அபு (சுயேச்சை) | 83 | 0.36% |
ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | P132 போர்டிக்சன், நெகிரி செம்பிலான் | அமினுடின் அருண் (பி.கே.ஆர்) | 42,013 | 52.40% | பா. கமலநாதன் (மஇகா) | 18,412 | 22.96% | 80,185 | 23,601 | 76.7% | ||
ரபீ முசுதபா (பாஸ்) | 18,235 | 22.74% | ||||||||||
(பெஜுவாங்) | 1,084 | 1.35% | ||||||||||
அப்துல் ராணி குலுப் அப்துல்லா (சுயேச்சை) | 441 | 0.55% |