ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
5-பீனைல்-1,3-தயசோல்-2,4-டையமீன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | Prescription Only (S4) (AU) |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 490-55-1 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 10275 |
ChemSpider | 9855 |
UNII | 7ZJ8PWY0XD |
ChEMBL | CHEMBL1514085 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
மூலக்கூற்று நிறை | 191.253 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
அமிபீனாசோல் (Amiphenazole) என்பது C9H9N3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தாப்டாசில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக மூச்சு விடும் செயல்முறையை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படும் இச்சேர்மம் பார்பிட்டியுரேட்டு அல்லது ஓபியேட்டு மருந்துகள் மிகையாகக் கொடுக்கப்படும்போது மாற்று மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அமிபீனாசோலுடன் பெமிகிரைடு சேர்த்து கொடுப்பது வழக்கமாகும். [1][2] பிற மயக்க மருந்துகளிலிருந்து விடுவிக்கவும் [3][4] சுவாசக் கோளாறுக்கான சிகிச்சையளிக்கவும் கூட இதைப் பயன்படுத்துவார்கள். [5] வலிநீக்கியான மார்ஃபீன் உற்பத்தி செய்யும் விழிப்புநிலை தடுமாறுதல் மற்றும் சுவாச மன அழுத்தத்தை அமிபீனாசோல் எதிர்க்கும் என்பதனாலும் வலிநீக்கி மீது குறைவான விளைவைக் கொண்டிருப்பதாலும் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. [6][7] தோக்சாப்ராம், நாலோக்சோன் போன்ற குறிப்பிட்ட சிறப்பு மூச்சுத் தூண்டிகளும் எதிர்ப்பு மருந்துகளும் நடைமுறையில் இருப்பினும் அமிபீனாசோல் இன்னும் சில நாடுகளில் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. [8][9]