அமில் குமார் தாசு (Amil Kumar Das) என்பவர் 1902 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 18, 1961 வரையிலான காலத்தில் வழ்ந்த ஓர் இந்திய வானியலாளர் ஆவார். அனைத்துலக புவியியற்பியல் ஆண்டின் போது, மாட்ரிட், இந்தியா மற்றும் மணிலா ஆகிய இடங்களில் இருந்த வானியல் ஆய்வகங்களுக்கு சூரிய ஒளியின் விளைவுகளை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. தென்னிந்தியாவில் உள்ள கொடைக்கானல் சூரிய வானியல் ஆய்வகம் புதியதாகக் கட்டப்பட்ட சூரிய குகை தொலைநோக்கி மூலம் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. டாக்டர் தாசு அந்த நேரத்தில் கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தார். 1960 ஆம் ஆண்டில், சூரிய நிலநடுக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் முதலாவது சூரியக் குகை தொலைநோக்கியை நிறுவும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது [1]. இவர் நினைவாக சந்திரனின் அப்பக்கத்திலிருக்கும் கிண்ணக்குழிக்கு தாசு கிண்ணக்குழி என்று பெயரிடப்பட்டது.