எம். எஸ். எஸ். அமீர் அலி M. S. S. Ameer Ali | |
---|---|
அனர்த்த நிவாரண சேவைகளுக்கான அமைச்சர் | |
பதவியில் 2007–2010 | |
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 ஆகத்து 2015 | |
பதவியில் 02 ஏப்ரல் 2004 – 08 ஏப்ரல் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 9, 1961 |
அரசியல் கட்சி | அகில இலங்கை மக்கள் காங்கிரசு |
எம். எஸ். எஸ். அமீர் அலி (M. S. S. Ameer Ali, பிறப்பு: 20 டிசம்பர் 1961) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.
அமீர் அலி ஆரம்பத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 2004 தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 21,232 விருப்பு வாக்குகள் பெற்று கட்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]
2008 ஆம் ஆண்டில் இவர் முசுலிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலகி ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 2010 தேர்தலில் மக்கள் காங்கிரசு கட்சியின் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,246 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[3]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,611 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[4][5][6]