அமெரிக்க மனநல மருத்துவர்கள் கல்லூரி (American College of Psychiatrists) என்பது அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோ நகரத்தை தளமாகக் கொண்ட மனநல மருத்துவர்களின் சங்கமாகும். இச்சங்கம் 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] ஒவ்வோர் ஆண்டும் இச்சங்கம் கூட்டங்களை நடத்துகிறது. செய்திமடலை வெளியிடுகிறது, விருதுகளை வழங்குகிறது. மனநல பயிற்சி பெறுபவர்களுக்கான பிரைட் (Psychiatry Resident-In-Training Examination) என்ற தேர்வையும் மனநல மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதற்கான (Psychiatrists In-Practice Examination) பைப் என்ற தேர்வையும் ஏற்பாடு செய்கிறது. அமெரிக்காவில் உள்ள 46,000 க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்களில் 750 மனநல மருத்துவர்கள் வரை இவ்வமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் நடப்பிலுள்ள உறுப்பினர்களால் இறுதி செய்யப்படுகிறார்கள்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)